பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அதியன் விண்ணத்தனார்-65புலவர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நல்லந்துவனார்

43

“கடை அழிய நீண்டகன்ற கண்ணாளைக் காளை
படையொடுங் கொண்டு பெயர்வானைச் சுற்றம்
இடைநெறித் தாக்குற்ற தேய்ப்ப அடல்மதுரை
ஆடற்கு நீரமைந்தது யாறு.”

                                       (பரிபாடல், ௧௧ : ௪௬—௯)

பிரித்து சென்ற தலைவன் வந்து, தலைமகள் மெய்யைத் தீண்டத் தீண்ட, அவள் உடலைப் பற்றிய பசலைநோய் நீங்குவது, குடிகளின் துயர்போக்கித் துணைபுரியும் அரசன் படை தாக்கத் தாக்க, அந்நாட்டைக் கைப்பற்றியிருந்த பகைவர் நீங்குவதுபோலும் எனவும், “குடிபுறம் காத்தோம்பும் சேங்கோலான் வியன் தானை, விடுவுழி விடுவுழிச் சென்றாங்கு, அவர் தொடுவுழித் தொடுவுழி நீங்கினறாற் பசப்பே.” (நெய் தற்கலி; ௧௩) இரைதேடித்திரியும் நாரைகள் தம் இரையை எண்ணி, மணல்மீது அமைதியாக நின்றிருக்கும் காட்சி, அந்தணர் அந்திக்காலத்தே ஆற்று மணலில் அமர்ந்து அரிய மறையினை மனத்திடை எண்ணியிருத்தலை. ஒக்கும், "நாரை முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறைகொள்ளும்' எனவும், காமநோயால், உயிர் தன் இயல்பில் நில்லாது அழிதற்கு, உப்பால் செய்யப்பெற்ற ஒரு பாவை, மழைத் துளியால் கரைந்து மறைதலோடு ஒக்கும். “உப்பியல் பாவை: உறையுற்றதுபோல உக்குவிடும் என் உயிர்” (நெய்தற்கலி) எனவும், கண்முன் தோன்றும் ஒரு தலைவி, தலைவன் கைக்கு அகப்பட அரியளாதல், நீருள் தோன்றும் நிறைமதியின் நிழல் கைக்கோடற்கு அரிதாதல் போலும், “ஓரொருகால் உள்வழியளாகி, நிறைமதி நீருள் நிழல்போல் கொளற்கு அரியள்” (நெய்தற்கலி: ௨௪ ) எனவும், கூறும் அவர் உவமையின் அருமையினை அறிந்து மகிழ்க.

தன் தலைவன்பால் கழிபெருங்காதல் கொண்டாளொரு காரிகை, அவன் வினைவயிற் பிரிந்தானாக, அவன் பிரிவுத் துயர்பொறாளாய், கடலையும் காற்றையும், ஞாயிறு திங்கள்