பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரிற் பிச்சையார் 99

தலைவன் வரும் கார்காலம் எப்போது வரும் என்பதை அறியத் துடித்த தோழி, அது அறிந்து கூறவல்ல அறிவரை அடைந்தாள் ; அவரை வணங்கினுள் ; பெரியீர்! எம் தலைவர் வாடைவீசும் குளிர்காலத்தே வருவேன் எனக் கூறிச் சென்றுள்ளார்; அக்காலம் எப்போது வருமோ என்று ஏங்கி வருந்துகிருள் எம் தலைவி; அக்காலம் எப்போது வரும் அருள் கூர்ந்து அறிந்து கூறுங்கள் ; கூறுவீராயின் உங்களுக்குப் பெரும் புண்ணியம் உண்டாம்; நீங்கள், உங்கள் உணவிற்காக வேண்டி ஊர் முழுதும் அலேந்து கிரியாமல், குற்றம் தீர்ந்து விளங்கும் தெருவில், நாய் உறைதல் அறியா நன்மைமிக்க வீடு ஒன்றிலேயே, செந்நெல் அரிசியாலாய சோற்றையும், துரய வெண்ணிற நெய்யையும் பெற்று வயிருர உண்டு, பனிக்காலத்தே விரும் பிக் குடித்தற்காம் வெப்பம் பொருந்திய நீரையும் செப்புக் கலத்தில் வேண்டும் அளவுபெற்று மகிழ்வீராக,” என்று வாழ்த்தி நின்ருள். . -

இச்சிறு நிகழ்ச்சியை, ஒரு புலவர் அழகிய ஒவிய மாக்கி நமக்கு அளித்துள்ளார். - - -

"ஆசில் தெருவில், சாய்இல் வியன்கடைச்

செந்நெல் அமலே வெண்மை வெள்ளிழுது ஒரிற் பிச்சை ஆா மாந்தி அற்சி வெய்யவெப்பத் தண்ணிர் சேமச் செப்பில் பெறிஇயரோ நீயே! மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவ தென்றி? - அக்கால் வருவர்எம் காத லோரே.” (குறுங் உள்ள) அறிவர், தமக்கு வேண்டும் வெண்ணெய் கலந்த செங் நெற் சோற்றினை வீடுதோறும் சென்று இாந்து உண்ணு மல் ஒரு வீட்டிலேயே பெற்று உண்டனர் என்றும், அவர் அவ்வாறு உண்ட உணவை ஒரு வீட்டாரே இட்டனர் என்றும்கூறி, அவ்வுணவை ஒரில் பிச்சை என்ற பெயரிட்டுப் பெருமைப்படுத்திய சிறப்பால், இப்புலவர், ஓரிற் பிச்சையார் என்ற பெயர் பெற்றுப் பெருமை உறுவாராயினர்.