பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு. கங்குல் வெள்ளத்தார்

உலக உயிர்கள் அனைத்தும் பிறப்பால் ஒத்த கிலேயின என்ருலும், அவை தம்முள் வேறுபடுவது அவை ஒவ் வொன்றும் மேற்கொண்டொழுகும் தொழில் வேற்றுமை யான் ஆம் என்று கூறுகின்றார் ஆசிரியர் வள்ளுவப் பெருங். தகையாா : -

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” (திருக் களஉ) இஃது ஒரளவு உண்மையே எனினும், ஊன்றி நோக் கியவிடத்து, அவ்வேறுபாடு, அவ்வுயிர்கள் மேற்கொள்ளும் தொழில் வேறுபாட்டான் ஆகிறது என்பதினும், அவ் வுயிர்கள்தம் மனவேறுபாட்டான் ஆகிறது எனக் கொள் வதே பொருத்தமாதல் விளங்கும். ஒருவரின் சொல் வேறுபாடு, தொழில்வேறுபாடுகளுக்குக் காரணமாய் நிற்பது அவர்தம் மனவேறுபாடேயாம்.

' உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும் ”

என்ற பாரதியார் பாட்டும்,

" மனத்துக்கண் மாசிலளுதலே அறமாம் என்ற வள்ளுவர் வாக்கும்,

"சினத்தலும் செய்தலோடு ஒக்கும்” என்ற பரிமேலழகர் உரையும் இக்கருத்தையே அரண் செய்தல் காண்க. . . . ;

மக்கள், இவ்வாறு ஒத்த உள்ளத்தினராய் இல்லாது

இருத்தலின், அவர்களால் காணப்படும் பொருள் ஒன்றே ஆகவும், கானும் அம்மக்கள் உள்ளத்தே பல்வேறு எண். னங்கள் எழுகின்றன கிலவொளி வீசி எழும் முழுத் திங்கள், உலகில் உள்ள எல்லாவுயிர்க்கும் ஒத்த காட்சி யையே அளிக்கின்றது என்ருலும், அதைக் காணும் அரசன்