பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 உவமையாற் பெயர்பெற்ருேர் தண்டினர், இளமைச் செய்கைகளே ஒருவகையால் தொகுத் துரைப்பாாாய் இப்பாட்டைப் பாடினர்’ என இப் பாட்டுப் பாடுவதற்குக் காரணமாய சூழ்நிலையினையும் வரைந்து காட்டுவர் ; ஆணுல், தாம் அவ்வாறு கூறுதற்குப், புற நானுாற்றில் பாடினேர், பாடப்பட்டோர் வரலாற்றுப் பகுதியில் டாக்டர். உ. வே. சா. அவர்கள் குறிப்பிடும் ஆதாரமற்ற சான்றுதான அல்லது தமக்குக் கிடைத்த தாகக்கூறும் அரித்துவார மங்கலம் வா. கோபாலசாமி ரகுநாத ராசாளியார் எட்டுப் பிரதியில் அவ்வாறு கூறப் பட்டுளதா என எதையும் கூறினால்லர். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு பாட்டைக்குறித்து யார் எதை வேண்டுமானுலும் கூறிவிடலாம் என்ற கிலேயினை உண்டாக்கிவிடாமல், கூறும் எதற்கும் பொருந்தும் ஆதா ரம் உண்டு என்பதை உணரும்வகையில் உணர்த்துவதைக் தமிழறிஞர்கள் ஒழுக்கமாகக் கொள்வார்களாக,