பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தன்னுரிமையுடன் திகழ்ந்த நம் தண்டமிழ் நாடு, பண்டை நாளில் புலவர் பெருமக்கள் பலரைப் பெற்று இலங்கிற்று. -

அப் புலவர்கள் தாம்கண்ட இயற்கைக் காட்சிகளைத் தம் மனக்கண்ணில் அமைத்து நிறுத்தி அவைகளையே தாம் கூறக் கருதிய பொருள்களோடு இணைத்து உவமையாக அவிருதுப் பாட்டு வடிவில் தருவாராயினர். இப்பெருமை யால் அவர் புலாலுடல் போயினும் எழுத்து அசை சீர் தளை அடி தொடைகளையே தம் கண் முதலிய உறுப்புக்களாகக் கொண்டு பாவுடல் எடுத்துக் கருத்துயிர் பெற்றுப் பொன்ருப் புகழுடன் இன்றும் நம்முடன் உறவுகொண்டுலவுகின்றனர். இத்தகையாரின் பெயர்கள் பல இடையீடுகளால் அறிய இயலாமல் மறைவுற்றன. ஆயினும் அவர் பெருமை யுணர்ந்த தமிழுலகு, அவர்கள் அமைத்த உவமை முதலிய தொடர்களையே அவர்கட்குப் பெயராகச் சூட்டி மகிழ்ந்தது. அப் பெயர்களை-அப் பாக்களை-நாமும் நம் பிற்காலத் தமிழ் மக்களும் கண்டு மகிழ, புலவர் திரு. கா. கோவிந்தன் அவர்கள் இருபத்திரண்டு புலவர்கள் வரலாற்றை அரிய பெரிய நூலாக்கி அளித்துள்ளார்கள். - -

இதற்குமுன் சங்கத் தமிழ்ப்புலவர் வரிசையில் கபிலர், பரணர், நக்கீரர், ஒளவையார், பெண்பாற் புலவர்கள் என் னும் ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளோம். அவைக ளுடன் இதனையும் ஆருவதாக உவமையாற். பெயர் பெற்றேர் எனப் பெயரமைத்து வெளியிட்டுள்ளோம். நம் தமிழக மாந்தர்கள் இதனையும் ஏற்றுக் கற்று இன்புறு வார்களென நம்புகின்ருேம். - --

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.