பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘தமிழ்நாடு எங்கே கிளைத்தது!’ என்று துருவினால் சங்க நூல்களில் காணலாம். அத்தகு நூல்களை ஆக்கித் தந்து தமிழ்நாட்டை விளக்கினோர், பழங்காலப் புலவர் பெருமக்கள். அவர்களுள் ஒருவர் கபிலர். இவர் அகப்பொருள், புறப்பொருள் நுண்மை உண்மைகளைத் தெள்ளத் தெளிய அறிந்து நமக்கு அச் செல்வத்தை அள்ளி அள்ளி ஈந்த அருங்கலைஞர். இவர்தம் வரலாற்றை நன்கு அறிந்து பயிலவேண்டுவது நம்கடமை. இதனை நன்முறையில் விளக்கியும், ஆய்ந்தும், பாட்டின் வளங்களே விளங்க எடுத்து அமைத்துக் காட்டியும் கபிலர் என்னும் பெயருடன், பல்கலைக் கழக மாணவர்க்குப் பாடமாக அமைத்தற்கேற்றவாறு புலவர், கா. கோவிந்தன் எம். ஏ., அவர்கள் ஆக்கித் தந்துள்ளார்கள். இதனை முதற்கண் நன்முறையில் வெளியிட்டுள்ளோம். இதனைத் தொடர்ந்து, சங்ககாலப் புலவர் வரலாறுகள் யாவும் சங்கத் தமிழ்ப் புலவர் வரிசையில் பகுதி பகுதியாக வெளிவரும். இதனையும் அவைகளையும் எம் தமிழ்த்திருநாட்டு மக்கள் வாங்கிக் கற்றுத் தக்காராய்த் தாழ்விலாச் செல்வராய்த் திகழ்வார்களென நம்புகின்றோம்; விரும்புகின்றோம்.

                                                                                                                               சைவசித்தாந்த நாற்பதிப்புக் கழகத்தார்.