பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 காவல பாவலர்கள்

கூறும் தலைமகன் கூற்றாகப் பாடிய குறுந்தொகைச் செய்யுளில், புவவர் நெடுங்கண்ணனார், தண்டு, கமண்டலம் தாங்கி, விரதம் மேற்கொண்டு வாழும் பார்ப்பனர்க்கு எழுதாக்கிளவியாம் வேதம் ஒதுதல் தொழிலாம் என்று அறிவிக்கின்றார் :

'பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! !
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின்சொ லுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.' (குறுந்: 156)

பகைவர் படையால் பாழுற்ற ஒர் ஊரில், மரையா வழங்கும் மன்றத்தில், யானைகள் உராய்ந்தமையால் முறிந்துபோன தூண்களையுடைய அம்பலத்தில், தலைவியைப் பிரிந்து வந்திருக்கும் ஒரு தலைமகன், அவள் பிரிவாலுண்டாய துயரால் செயலற்றுத், தன் இரு முழந்தாள்களையும் இரு கைகளாலும் இறுகப் பிணித்துக்கொண்டே, "நம் நிலேயோ இது ; அவளோ, நாம் அவள் நினைவாகவே இருந்து வருந்துகிறோம் என்பதை அறியாளாய்ப் படுக்கையிற் கிடந்து, கொதிக்கும் உள்ளத்துடன் பெருமூச்சு விட்டு, கண்களினின்றும் பெருகித் தோள் நனையுமாறு ஒழுகும் நீர்த்துளிகளை விரல் நகத்தால் தெறித்துவிட்டுக் கொண்டே, இருள் நிறைந்த நடுயாமத்திலும் உறங்குவ தொழிந்து வருந்துவள்” என்று அவளே நினைந்து வருந்துவன் எனப் பிரிந்துறையும் காதலர்களின் துயர்நிலையினைப் பாடிய நம் புலவர், ஒரு படைத்தலைவராதலின், படையால் பாழ்பட்ட பகைவர் நாட்டுச் சிற்றுார்க்காட்சியை நன்கு காட்டியுள்ளார்; நடுயாமத்தும் துயிலாதிருக்கும் தலைவியின் செயலுக்குப் போர்வல்ல அரசர்கள் சூழ்ந்து அழிக்க, எல்லாம் அழியவும், எஞ்சியுள்ள ஒரு மதிலும் உறுதி யின்றிக் குலைந்துளது என அறிந்த சிற்றரசன் எந்த