பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி தமிழ்ச் சங்கங்கள் மூன்றனுள், கடைச் சங்கம் புரந்த, பாண்டிய அரசர்களுள் உக்கிரப் பெருவழுதியும் ஒருவன் ; கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் வாழ்ந்தவனும் இவனே. கடைச்சங்கம் கலேந்துவிடுமோ என்ற அச்சத் தால், அச்சங்கப் புலவர்களின் பாக்களே ஆராய்ந்து அகத்திணே தழுவிய பாடல்களுள், பதின்மூன்றடிச் சிறு மையும், முப்பத்தோரடிப் பெருமையும் கொண்ட நானுாறு பாக்களே எடுத்து, அகநானூறு என்ற பெயரால் தொகும் பித்தான் இந்த அரிய தொண்டில் இவனுக்கு உற்ற துணையாய் உதவியவர், மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருத்திர சன்மன் என்ற ஊமைப் புலவராவர். திருக் குறள் அரங்கேறியதும் இவன் அவையிலேயே என்று கூறுவாரும உள்ா. - தர்னும் ஒரு புலவனுய்த் தமிழ் வளர்த்ததோடு தமிழ்ப் புலவர் துணைகொண்டு தமிழ் நூல் தொகுப்பித்த பெருமையுடையோணுகிய பெருவழுதி, பல சிற்றரண்களே உள்ளடக்கிய பேரரண் அமைந்த காரணத்தால், கானப் பேரெயில் என்ற பெயர் பெற்ற, பகைவர் அணுகற்கரிய ஊரை இருப்பிடமாகக் கொண்டு, வெற்றி விளங்க விற்றிருந்த் வேங்கைமார்பன் என்ற குறுகில மன்னனே வென்று சிறப்புற்ருன்; அதனல், கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று பாராட்டவும் பெற்ருன். 'அருங்குறும்பு உடுத்த கானப் பேரெயில் கருங்கைக் கொல்லன் செந்தி மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன வேங்கை மார்பன் இரங்க வைகலும் ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர் பாடுதுறை முற்றிய கொற்ற வேங்கே!" (புறம் : 21) தமிழரசர்கள்பால் காண இயலா நற்பண்பொன்று இவன்பால் இருக்கக் கர்ண்கிருேம். உலகம் போற்ற