பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காவல பாவலர்கள் வளங்கே மூரனப் புலத்தல் கூடுமோ? தோழி ...... சிறுபுறம் கவையின கை, உறுபெயல் தண்துளிக் கேற்ற பல வுழு செஞ்செய் மண்போல் கெகிழ்ந்தவற் கலுழ்ந்தே நெஞ்சறை போகிய அறிவி னேற்கே.' (அகம் : .சு) இதில், தமிழ்மகளின் உள்ளத்தை உணர்த்திய புலவர், கிலத்தைப் பலமுறை ஆழஉழுதலாம் பயன், பெரிது என உழவுத்தொழில் பற்றிய உயர்ந்த துணுக்கம் ஒன்றையும் உணர்த்தியுள்ளார். களவொழுக்கம் மேற்கொண்டொழுகும் தலைமகன், தலைமகன்பால் வந்து மகிழ்ந்து செல்ல விரும்பி, காவல் சிறந்த அவள் மனேயுள் மறைந்து புகும்பொழுது, கிலவு வெளிப்படல் முதலிய தடைகளால், தன்முயற்சிக்கு எக்ம் வருவதறிந்து அஞ்சி, வறிதே மீண்டு தன்னுரர் புகு வன் என்ற செய்தியை உள்ளுறை வகையால் உணர்த்த, பன்றியொன்று, தினேக்கதிரை உண்ணவிரும்பிப் புனம் நோக்கிச்சென்று, ஆண்டு, தினக்கதிரை அழிக்கவரும் விலங்குகளேக் கைப்பற்ற, புனங்காப்போர் அமைத்திருக் கும் இயந்திரப் புழையினே நெருங்குங்கால், அருகே எழுந்த பல்லிச்சொல் கேட்டு, மேற்சென்ருல் ஏதம் உண் டாம் என அஞ்சி, வறிதே மீண்டு தன் அளே புகும் என்று கூறிய கம் புலவர் புலமை நலத்தைப் போற்றுவோமாக. "சிறுகண் பன்றி, . . ஓங்குமலை வியன்புனம் படீஇயர், வீங்குபொறி நாழை நுழையும் பொழுதில் தாழாது பாங்காப் பக்கத்துப் பல்லி பட்டென மெல்ல மெல்ல பிறக்கே பெயர்ந்துதன் கல்லளைப் பள்ளி வதியும் காடன்.” (நற் : க.டி)