பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சேரமான் இளங்குட்டுவன் சேர அரசர்கள் குட்ட நாட்டிற்கு உரிமை பூண் டிருந்த சிறப்பால், தம் பெயர்களுள் ஒன்ருகக் குட்டுவன் என்பதையும் மேற்கொண்டிருந்தனர்; பல் யானேச்செல் கெழு குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், குட்டுவஞ் சேரல் என்ற பெயர்களைக் காண்க. அச்சேரர் மரபிலே பிறந்து, நனி இனேயணுய காலத்திலேயே புலமை யிற் சிறந்து விளங்கிய காரணத்தால், நம் புலவர் சேரமான் இளங்குட்டுவன் என்று அழைக்கப் பெற்றுளார். நெடுக் தொகை என அழைக்கப்பெறும் அகநானூற்றில், பாலைத் திணையில், தலைமகன் ஒருவனேக் காதலித்து, தன்மனேயி லேயே இருப்பின் தங்கள் அன்பு வாழ்க்கைக்கு இடையூறு உண்டாம் என அஞ்சி, அவைேடு அவனுார் சென்றுவிட்ட தன்மகளே கினேந்து அழும் செவிலித்தாய் கூற்று அமைக்க செய்யுளொன்று காணப்படுகிறது; கம் புலவர்தம் புலமை யினேப் புலப்படுத்த நமக்குக் கி ைட த் த பாட்டு அஃதொன்றே. இதில், அழகிய இனிய சொற்களேயே கூறும் தலே வியின் தோழிமார்களேயும், அவர்களோடு சிறிது பொழுது பந்தாடி மகிழும் அதற்கே வருந்தும் அத்துணே மென்மை யுடைய தலைவியையும், அத்தகு மென்மையுடையாள், தான்கொண்ட காதலொழுக்கத்திற்கு ஊறு நேராவ்ண்ணம் தலைவனுார் செல்ல முற்பட்டபொழுது, காடும், மலேயும் செறிந்த பாலே கிலத்தில், கோடைக்காலத்து ஞாயிற்றின் வெப்பக் கொடுமையலும், ஆண்டுவீசும் கோடைக்காற்றின் துணையாலும் தீப்பிடித்து எரியும் மூங்கிற் காடுகளின் நெருப்பில்ை, மேலும் பசுமையற்று, நடப்பதற்குத் தகுதி யற்றுப்போன சுரவழியில் நடந்து செல்லவல்ல திண்மை உடையா ளானமையினையும், தன்மகளின் மென்மையினே யும், அவள் சென்ற ஆற்றின் கொடுமையினையும் உணர்ந்த அவள் தாய், அத்தகு கொடுவழியில் அவள் விரைந்து செல்லவல்லளோ என எண்ணி வருந்தும் வருத்த கிலே யினேயும், பெற்றெடுத்த தாய் வருந்துவளே எனவும்