பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காவல பாவலர்கள் லாம் உணர்வாள்; என்ருலும் எதையாவது கூறித் தலைவி யைத் தேற்ற எண்ணினுள்; கலேவன் வெளிநாடு செல்வதற் கான முயற்சிகள் மேற்கொண்டதையெல்லாம் தலைவி கண்டுளாள் ஆதலின், தலைவன் செல்லான் எனக் கூறினல் ஏற்றுக்கொள்ளாளாதலின், 'தோழி! தலைவர் கின்னேப் பிரிந்து செல்லார் என்றே யான் எண்ணுகிறேன்; ஆல்ை, அவர் செல்வது உறுதி என்று நீ கூறுகின்றன; அவ்வாருயின், அவர் தனித்துச் செல்வாரல்லர், கின் துதல் காறும் நறுமணம் அவரைப் பிரியவிடாது கின் துத லழகினும், கின் கண்களில் தேங்கிநிற்கும் கண்ணிர், தனித்து விட்டுச்செல்லும் துணிவினே அவர்க்கு அளிக் காது; அதைக் கண்டபின்னரும் விட்டுப்பிரியும் அத்துனே அருளற்றவர் அல்லர் நம் தலைவர்; அவர் கின்னேயும் உடன் கொண்டே செல்வர்; அழுவதொழிக,” என்றெல்லாம் கூறித் தேற்றுவாள் எனக்கூறி அக்கால மக்களின் பண்பு பெற்ற வாழ்க்கைச் சிறப்புக்களை வகுத்துக் காட்டுகிருச் நம்புலவர் சேரமானெங்தை: - நீர்வார் கண்ணே நீ இவண் ஒழிய யாரோ பிரிகிற் பவரே, - - தேம் ஊர் ஒண்ணுதல் கின்னெடும் செலவே." :: * (குறுங்: உஉ) நன்செய் நிலங்களே உழுது கெல்கட்டு முடித்த உழவர், விடியற்காலத்தே, தம் ஏர்களையும் எருமைகளேயும், மலர்களில் படிந்து மதுவுண்டு மகிழும் வண்டுகள் ஒலிக்கச்சென்று, தம் தோட்டத்துப் புன்செய்களே, மண் பிறழ உழுது உறு பயன் கொள்வதை, அகநானூற்றுப் பாட்டொன்றில் பாராட்டியுள்ளார்: . . . . . . . . . . . வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருங்னே அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினே இனச்சிதர் ஆர்ப்ப நெடுநெல் அடைச்சிய கழனிஏர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்டு உழவர். , - . . - அகம்: ச