பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் ஆதன் என்ற சொல், சேரர் வழி வந்தவர்களே சி. குறிக்கி அவர் பெயர்களின் முன்னும் பின்னும் இணைக்கப் படுவதுண்டு; ஆதனுங்கன், ஆதனவினி, ஆதனேரி, ஆத னழிசி என்ற பெயர்கள், அச்சொல் பெயர்களின் முன் வந்தமைக்கு எடுத்துக் காட்டுகளாம்; கடுங்கோ வாழி யாதன், நெடுவேளாதன், கருங்குள ஆதன் என்பன அச் சொல் பெயர்களின் பிற்பகுதியில் வந்தமைக்கு எடுத்துக் காட்டுகளாம். சேரர்க்கு உரித்து எனப்பட்ட இவ் ஆதன் என்ற சொல், சேரரைக் குறிக்க வழங்கும் சேரர் என்ற மற்ருெரு சொல்லோடு இணேந்து வருதலும் உண்டு : உதியஞ் சேரலாதன், பெருஞ் சேரலாதன், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் என்ற பெயர்களேக் காண்க. பெயர் களுக்கு முன், அப் பெயருடையாருக்குப் பெருமையளிக் தற்காக உயர்வுப் பொருள்தரும் நெடு என்ற அடை கொடுத்து வழங்குதலும் வழக்கமாம்; நெடியோன், நெடுங் கிள்ளி, நேடுஞ்செழியன், நெடுமாவளவன், நெடுமானஞ்சி, நெடுவேள், நெடுவேளாதன் என்பன காண்க. அவ்வாறே சேரலாதன் என்ற பெயரோடு நெடு என்ற ஆடையினைச் சேர்த்துவழங்கிய பெயர்களும் உண்டு; சோமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமய வரம்பன் கேடுஞ்சேரலாதன் சேரர்களுள் நெடுஞ்சேரலாதர் பலர் இருப்பதால், அவரின் பிரித்துக் காண்பதற்காக நம்புலவர், முடங்கிக் கிடந்த நெடுஞ் சேரலாதன் என அழைக்கப்பெற்றுள்ளார். ஆல்ை, அவர் பெயர்க்கு முன்வரும் முடங்கிக் கிடந்த என்ற சிறப் படை இவர்க்கு வர இருந்த காரணம் யாது என்பது சிறிதும் விளங்கவில்லை. . இவர் பாடிய செய்தல் தினே தழுவிய பாடல் மிகவும் நயம் செறிந்து காணப்படுகிறது; சிறு சிறு கண்களைக் கொண்ட பெரிய வலையினைப் பருத்து மீண்ட கயிற்ருேடு பிணத்துக் கொண்டு, கடலிடையே சென்று, கடல் வள மெல்லாம் சுருங்கிற்ருே என எண்ணுமாறு அக்கடல் மீன்க