பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவல பாவலர்கள்

  • ::::::: -

தோற்றுவாய் 'இருவேறு உலகத்தியற்கை , திருவேறு ; . தெள்ளிய சாதலும் வேறு' (திருக் உளச) என்பர் வள்ளுவர். அறிவுடையாரிடையே செல்வம் கில்லா மையும், செல்வமுடையாரிடையே அறிவு சென்றடையர் மையும் உலகியல். அறிவுடையார், பொருளினும் அறிவே ஆற்றலுடையது என உணர்ந்தவராதலின், அப்பொருள் பெறு முயற்சி மேற்கொள்ளாது, அறிவுவளர் வழியினேயே மேற்கொள்வதால் பொருள் அவர்கள்பால் அடைந்திலது ; பொருள் பெற்ருள் தம் அறியாமையால், பொருளே எல்லாம் என்று எண்ணிவிடுவதாலும், அப்பொருளே ஈட்டலும், காத்தலுமாய தொழிற்கே அவர் காலமெல்லாம் கழிந்து விடுவதாலும், அறிவைப் பெறவேண்டும் என்ற என்ன மற்றவராகிவிடுகின்றனர். இவ்விருவர் நிலைகளும் குறை பாடுடையனவே அறிவுடையார் கல்வாழ்வு வாழ, அவர்க் குப் பொருள் தேவை; பொருளுடையார் அதை கல்வழியிற் பேண அவருக்கு அறிவு தேவை. ஆகவே ஒவ்வொருவரும் இரண்டையும் பெறுதல் வேண்டும். - : பொருள்பெழுமல் அறிவொன்றையே பெற்ருரையும், அறிவுபெருமல் பொருளொன்றையே உடையாரையும் ஒருங்கே பெற்றுள்ள உலகில், அறிவுடையார் சொல்வழி பொருளுடையார் நடத்தல்வேண்டும்; அதனுல் உலகமும் வாழும்; அவர்களும் வாழ்வர்; அவ்வாறின்றி உல்கம் பொருளுடையார் வழிநடப்பது என்று ஆகிவிட்டால், அவ்வுலகம் அவர்கள் அறியாமை வழிப்பட்டு அழிதல் உறுதி. - -.