பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 苓 வாழ்ந்த பெரியார்கள் இருபத்தெண்மரின் வரலாறுகள் இதில் வகுத்துரைக்கப்பட்டுள்ளன. அவர்களுள், கருவூர்ச் சேரமான்சாத்தன், சேரமான் இளங்குட்டுவன், சேரமான் கணக்காலிரும்பொறை, சேர்மான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சேரமானேங்தை, நம்பிகுட்டுவ ஞர், பாலேபாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங் கடுங்கோ, முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் என்றி ஒன்பதின்மரும் சேரர்குடி வந்தவராவர்; குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கோப்பெருஞ் சோழன், கலங் கிள்ளி, கல்லுருத்திரன், மாவளத்தான் முதலிய ஐவரும் சோழர் குடிவழி வந்தவர்; அண்டர்மகன் குறுவழுதியார், அறிவுடைநம்பி, ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், எளுதி நெடுங்கண்ணனுர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டி யனுர், கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, கானப்பேர் எயில்கடந்த உக்கிரப்பெருவழுதி, குறுவழுதியார், தலையா லங்கானத்துச் செருவென்ற கேடுஞ்செழியன், கல்வழுதி யார், பன்னுடு தந்த பாண்டியன் மாறன்வழுதி, முடத்திரு மாறன் முதலிய பன்னிருவரும் தமிழ் வளர்த்த பாண்டியர் வழிவந்தவராவர்; இம் மூவேந்தர் வழிவரா அரசர்களாய்ப் புலமையுற்றிருந்த ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன், இளந்திரையன் என்ற இருவரும் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளனர். இவ்வரசர்களின் வரலாறுகளேயும், அவ் வரலாறு உரைக்கும் அறவுரைகளேயும் அறிந்து பயன் பெறுவோமாக. -