உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கிழார்ப் பெயர்பெற்றேர் துள்ளவற்றை அவர்க்குப் பகிர்ந்தளித்து வாழும் அருட் குணமுடையோர் வழிவந்தவராவர்; இவ்வாறு அடைக் கலம் புகுந்தாரை ஆதரிக்கும் அருட்குணமுடையோர் வழிவந்த நீ, அண்டியோரை ஆதரிக்கும் அக்குணமே உடையோர் வழிவந்த இவரை அழிக்க எண்ணுதல் அறச் செயலாமோ என்பதை எண்ணிப் பார்ப்பாயாக ; மேலும், இவர்கள் கின்னெடு பகைத்துப் போரிடும் பருவமுற்ருரும் அன்றே ; தாம் எங்கே இருக்கிருேம் எத்தகைய துயர் கிலே தமக்கு வரப்போகிறது என்பதை அறியாமல், அறி முகம் இல்லா இடத்தில் வந்துள்ளமையால் வருந்தி அழுது, தம்முன் வந்து கிற்கும் யானையை, அது தம்மைக் கொல்ல வந்து கிற்கிறது என்பதையும் அறியாமல், கண்டு களித்து அக்களிப்பால் தம் அழுகையை மறந்து, மறுவ லும் தம்மைச் சூழ்ந்திருப்பார் முகங்களைப் பார்த்து, அவற்றுள் தாமறிந்த முகம் ஒன்றும் இல்லாமை கண்டு மீண்டும் அழுகை மேற்கொள்ளும் அத்துணை இளைய ான்ருே ? இத்துணை இளேயரைக் கொல்வது கினக்கு இழுக்கன்றிப் புகழாமோ என்பதையும் எண்ணிப் பார்ப்பா யாக” என்று கூறி முடித்தார்; கோஆர்கிழார் கோவை பட எடுத்துக்காட்டிய காரணங்களைக் கேட்ட பின்னரும் தான் துணிந்ததே செய்யும் தகுதியிலானல்லன் அவன் ; அவர் சொல்கொண்டு அம்மக்களைப் போகவிடுத்தான் : நீயே,புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவமே, புலன்உழு துண்மார் புன்கண்அஞ்சி தமது பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்ார், களிறுகண்டு அழுஉம் அழாஅல் மறந்த புன்தலைச் சிரு.அர்; மன்று மருண்டுநோக்கி விருந்திற் புன்கனே வுடையர் ; கேட்டனை யாயின் நீ வேட்டது செய்ம்மே..?? . . . . . . . . (புறம்: சசு) இவ்வாறு அவன் தவறு கண்டு கிருத்தி, நல்லாட்சி விற்கத் துணைபுரிந்து வாழ்ந்திருந்தார் கோவூர்கிழார்.