உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. துறையூர் ஓடைகிழார் துறையூர், திருச்சி மாவட்டத்தில் காவிரியாற்றின் கரையில் உள்ளதோரூர். அவ் ஆரினாான ஒடைகிழார், வறுமையால் வாடினர்; தம் வறுமை தீர்க்கும் வள்ளல் ஆய் ஒருவனே என உணர்ந்தார் : தமிழக மலைகளுள் தலைசிறந்ததாகக் கருதப்படும் பொதியமலைக்குரிய ஆய், கடையெழு வள்ளல்களுள் ஒருவனவன்; அப் பொதிய மலைச் சாரலேச்சேர்ந்த ஆய்குடி என்னும் ஊரும் அவன் உடைமை; ஆய், புலவர் பலர்தம் பாராட்டைப் பெற்ற வன்; மோசி பாடிய ஆய்' எனப் புலவர் ஒருவர் இவனைச் சிறப்பித்துள்ளார். ஆய் அமர்கடக்கும் ஆண்மையாளன் ; தமிழகத்துட் புகுந்து தொல்லை விளக்கும் கொங்கர் என்ற நாடோடிப் போர்வீரர் கூட்டத்தைப் பொதியமலையி லிருந்து மேலைக் கடற்கரைவரை துரத்திச் சென்றுவிட் டான் எனின் அவன் வில்லாண்மைக்கு வேறு சான்று வேண்டா; ஆய் சிறந்த வள்ளன்மை உடையவன்; அவன் வள்ளல் தன்மையினே வியந்து பாராட்ட, அவன், தனக்கு நாகம் நல்கிய நல்லாடையொன்றை, ஆலமர் நீலகண்ட லுக்கு அளித்து மகிழ்ந்தான் என்ற ஒரு கதையினையும் அக்கால மக்கள் கட்டிவிட்டிருந்தனர். அவன், தன்பால் வந்து இாப்பார்க்கு அவர் தகுதி நோக்காதே, களிறும் தேரும் கணக்கின்றி ஈவன்; அவன் கொடைப்பொருள் களுள், யானைக் கொடையே மிகுதியாக இருப்பது கண்ட புலவர் ஒருவர், ஆய் ! கின் நாட்டு யானைகள், ஒருமுறை கருவுற்ருல் பத்துக் கன்றுகளைப் பெற்றுத் தருமோ?’ என வியந்து வினவுவார் ; இவ்வாறு கொடுக்கும் அவன், இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனக் கணக்கிடும் வாணிப உள்ளம் உடையான் அல்லன். ஆய், இவ்வாறு அருந்திறலும், பெருங் கொடையும் உடையணுதலை அறிந்து, அவன்பால் சென்ருர் ஒடை கிழார்; “கிழிந்த உடையின் தையலுக்கிடையே வாழும் பேன் ஒருபால் துன்புறுத்துகிறது; என் சுற்றத்தோடு