உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ. மதுரை மருதங்கிழார் மகனுர் சோகுத்தனுர் குத்தனர் என்பது இவர் இயற்பெயர் ; சோ என்ற எழுத்து எக்காரணம் பற்றியோ பெயர்களுக்கு அடையாக வருகிறது. மதுரையில் வாழ்ந்தவர் ; மருதங்கிழாரின் மகன் ; இவர், இளம் போத்தனர், பெருங்கண்ணனர் என்ற பெயர் உடைய புலவர் பெருமக்கள் இருவரை உடன் பிறந்தாராகக் கொண்டவர்; இதல்ை இவர் குடும்பமே தமிழறிந்த குடும்பம் என்பது புலப்படும். - ஆறலை கள்வர் வாழும் கொடுமையுடைய பாலை கிலத் தில், அவர்களால் கொல்லப்பெற்ற வழிப்போவார்களின் பிணம் போற்றுவார் எவரையும் பெருமல் அழிந்து முடை காற்றம் காறும் ; அக்காற்றத்தால் பிணக்கின்று பழகிய பறவைகளும் அப்பினத்தருகே செல்ல அஞ்சும் (நற் : கூஉக) எனப் பாலைநிலத்தின் கொடுமையினை நன்கு எடுத்துக் காட்டியுள்ளார் ; பொருள் கருதி அக்கொடிய வழியில் சென்ற தலைவன் தலைமகள் உருவம் தோன்றக் கண்டு மயங்குவதும், சென்ற தலைவன் விரைவில் மீள்வன் எனத் தோழி துணிந்திருப்பதும் நன்கு விளக்கப் பட்டுளது. தலைவன், போன்புடையவன்; நாகம்போல் துயர் தரும் கொடுஞ்செயல் செய்ய அஞ்சுவன். 'வாையா நயவினர்; நிாையம் பேணுர்’ (நற் : கூஉக) எனத்தோழி கூறுவது அவள் அவன்மாட்டுக் கொண் டுள்ள உறுதிப்பாட்டினை உணர்த்துகின்றது.