உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாங்குடி கிழார் 139. வெற்றிபல கொண்ட பெருவேந்தன் என்பதற்கேற்பவும், அவனேப் பற்றிய பாடலும் பெரியதோர் பாடலாதல் வேண்டும். அப்பாடற்பொருளும் பெருமையளிக்கும் பொருளாதல் வேண்டும் என். எண்ணினர் மாங்குடி கிழார்; அவ்வாறே நெடுஞ்செழியன் புகழ் போற்றப் பாடிய மாங்குடி மருதனுர் மதுரைக்காஞ்சி, எழு நாற்று எண்பத்திாண்டு அடிகளைக் கொண்ட பெரிய பாட்டாய் முடிக்கது. அப்பாடற் பொருளும், பெருக்திணைக்குப் புறஞன காஞ்சித்திணேயாய் அமைந்தது ; காஞ்சித்திணே தழுவ வந்த பாடல்கள் எத்தனையோ இருப்பவும், அக் காஞ்சிப் பாடல்களைப் பாடியோரையெல்லாம் காஞ்சிப் புலவர் என அழைக்காது, மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனுரையே காஞ்சிப்புலவன்’ எனப் பெயரிட்டு அழைப்பாாயினர். மதுரைக் காஞ்சியின் மாண்பினே மதித்துக் காணல் சண்டு இயலாது, ஆதலின் அப்பாட்டில் காணலாம் சில நயங்களை மட்டுமே கண்டு செல்வோமாக; மதுரைக்காஞ்சி, பாண்டிநாட்டையும், மதுரைத் தலைநகரையுமே பாாாட்டு கிறது எனினும், அப் பாராட்டு, தமிழகத்தையும், தமிழ கத்துப் பேரூர்களயும் பொதுவாகப் பாராட்டிய பாராட்டே என்று கொள்ளுதல் குறையாகாது. தமிழ கத்தின் இயற்கை வளங்களையும், அதன் ஐக்கில அமைப் பினேயும், அந்நாட்டின் பேரூர்களின் பண்புகளையும், அப் பேரூர்களின் அாண்களையும், அரசர் கெருமுதலாம் தெருக்கரையும், அக்கர்க் கோயில்களையும், அங்காடி வீதி' களேயும், கடற்றுறைகளையும், அங்காடியில் காணலாம். அரும்பொருள்களையும், அந்நகர் வாழ்மக்களையும், அவர்கள் மேற்கொண்டிருந்த அருந்தொழில்களையும், அத்தொழில் களின் நட்பங்களையும், அமைச்சர், அறங்கூறவையத்தார் இயல்புகளையும், ஆடவர், பெண்டிர் பண்புகளேயும், ஊரில் எழும் ஒலிகளின் வகைகளையும், ஆங்கு ஓங்கிப் பறக்கும். பல்வேறு கொடிகளையும், வேறு பிறவற்றையும் ஒருங்கே: கூறும் ஒப்பற்ற நால் மதுாைக்காஞ்சி ஒன்றே ஆகும்.