உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிசில்கிழார் 27. பாட்டிலேயே, அவர் அக்காலத் தமிழ்மகளிரின் மாண்பு களைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார் ; காலம் முழு தும் கணவன்கன் அண்மையில் இருந்துகொண்டே, தனக்கு வேண்டுவன எல்லாவற்றையும் அளித்தல் வேண்டும் என எண்ணும் இக்கால மகளிாைப்போலல் லாமல், கணவன் எப்போதோ செய்த ஒர் உதவியை உள்ளத்தில் என்றும் எண்ணி மகிழ்ந்து அமையும் அருங் குணமுடையவள் பழந் தமிழ்மகள் எனப் பாராட்டி யுள்ளார். பழந்தமிழ்ப் பெண்ணுெருக்கி மணந்து கணவன் வீடுசென்று வாழ்கின்ருள் ; அவளைக் காணவந்தாள் அவள் கோழி : ஆங்கு, அவள் பெருகலம் சிறிதும் குறையாதே இருப்பதுகண்டு வியந்து வின் ருள் ; தோழியின் வியப் புணர்ந்த அவள், தோழி தலைவர் முன்னுெருநாள் செய்த தலையளியே இன்றும் எனக்கு இன்பமளிக்கிறது : பண்டொரு முழுநிலா நாளன்று, தலைவர் அன்புசெய்து சென்றனான்ருே அன்று என்தோள் பெற்ற மணம் இன்றும் மங்காது மணக்கிறது,” என்று கூறினுள் எனப் பாடியுளளாா : ' காடன், தொல்லைத்திங்கள் நெடுவெண் நிலவின் மணந்தனன் மன் நெடுங் தோளே ; இன்றும் முல்லே முகை காறும்மே” (குறுக்: ககக-). புறநானூற்றில் காணப்படும், மகட்பாற்காஞ்சி, தொடாக்காஞ்சி, கானே மறம், குதிரை மறம் முதலாய துறை கழுவிவந்த அரசில்கிழார் பாடல்கள், அரிய நயம் பல செறிந்த அவர் புலமையின் சிறப்பிற்குச் சான்று பகர்ந்து விற்கின்றன.