உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கிழார்ப் பெயர்பெற்றேர் அவனைப் பாராட்டினர். கிள்ளிவளவன் புலவர் பலர் பாராட்ட வாய்ந்தவன் என்பதோடு அவனும் ஒரு புலவ வைன்; தன் உயிர்த் துணேவனுய், உயர்ந்த படைத் தலே வனுய் விளங்கிய சிறுகுடிகிழான் பண்ணன் என்பானின் பெருங் கொடைவளம் விளங்க அவன் பாராட்டிய பாட் டெர்ன்று, புற நானுற்றில் பெரும் புலவர் பாக்களோடு ஒப்பவைத்துப் பாராட்டப் பெற்றுள்ளது. கிள்ளிவளவன் புலமையும் பெருமையும் பிறர் உரைக்க உணர்த்த புலவர் ஆலத்தார் கிழார், அவனேச் சென்று பாராட்டிப் பரிசுபெறுதல் அவனுக்கேயல்லாமல் தமக்கும் பெருமைதரு செயலாம் என்று எண்ணினர் ; அவன் அரசிருக்கையாம் உறையூர் சென்ருர் ; ஆங்கே, பகைவர் யானைப் படைகளே அழிப்புழிப் பெற்ற புண்ணுல் பெருமை கொள்ளும் அவன் வீரர்கள் வாழும் பாசறைப் பெருமையினேயும், பகைவர் நாட்டைப் பாழ்செய்து பெறும் வெற்றி விரும்பிக் கொள்ளும் அவன் போர்க் கோலக் காட்சியினையும், போர் நோக்கிப் புறப்படும் அக் காலத்திலும் தன்வாயில் கின்று வறுமை உரைத்தார்க்குத் தேர்பல வழங்கும் அவன் வள்ளன்மையினையும் கண்டார்; கண்டுகளித்த அவன் வெற்றிச் சிறப்பையும், வண்மையின் ஒண்மையினையும் ஒருங்கே பாராட்டிப் பாட்டொன்று அமைத்தார்; அப்பாட்டிலேயே தம் வறுமையின் கொடுமை யினையும் எடுத்துக்கூற எண்ணினர் ; ஆணுல், என் வறு மையின் கொடுமையிது ; இதுபோகப் பொருள்தர வேண்டு கின்றேன்’ எனல் கம்பெருமைக்கு இழுக்காம் என உணர்ந்தார் ; உடனே, கையில் யாழும், அரையில் வேற்ற அால் கொண்டு தைக்கப்பெற்ற கிழிந்து கைந்துபோன ஆடையும் கொண்ட பாணன் ஒருவன், பசித்துயர் வருத்த வந்து, வறுமையால் வாடும் எம் சுற்றத்தின் துயர்போக வழங்குவார் எவரும் இவ்வுலகில் இலரோ ? எனத் தன்னே வினவியதுபோலவும்,வினவிய பாணனுக்கு, வளவன்வாயில் வந்து இாப்போர் ஆண்டு நெடிது கிற்றலும், தம் வறுமை யினை வாயால் கூறி வருக்கலும் வேண்டுவதின்று :