உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலத்தார் கிழார் . 39.

  • தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய,

இடையோர் பழத்தின் பைங்கனி யாக்கக் கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு துகா, கிலமலர் வையத்து வலமுறை வளைஇ வேந்து பீடழித்த எந்துவேல் தானேயொடு ஆற்றல் என்பதன் தோற்றம் கேள்;இனிக் கள்ளிபோகிய களரியம் பறந்தலை முள்ளுடை வியன்காட்டதுவே, நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல் என இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத் தாக்கனங் குரீஇத் தாங்கு கூடேய்ப்ப ஒருசிறைக் கொளீ இய திரிவாய் வலம்புரி ஞாலங் காவலர் சடைத்திலச் - காலத் தோன்றினும் கோகோ யானே.’ (புறம் : உஉதி) ஆலத்தார் கிழார் பாடியனவாக இரண்டு பாக்கள் குறுங் தொகைக்கண் காணப்படுகின்றன; அவற்றுள் ஒன்று வரைவு நீட்டித்தவழி ஆற்ருத் தலைமகள் தன் ஆற்ருமை யினத் தோழிக்குரைக்கும் துறை அமைந்து வந்துளது. நற்குடிவந்த பெண் ஒருத்தி ; பெண்மைக்குரிய குணங்களில் ஒன்றும் குறைவின்றிப் பெற்றவள்; அத் தகையாள் தன் உள்ளம் விரும்பிய நல்லோன் ஒருவனேக் காதலித்துத் தம் காதல் வாழ்வினைத் தன் உற்ருர் உறவினர் எவரும் அறியாவண்ணம் களவில் மேற் கொண்டு வாழ்கிருள் , களவின்டமே பேரின்பமாய்த் தோன்றுதலினல் அவனும் அக்களவொழுக்கத்தினே மேலும் சில நாள் நுகர விரும்பி வரைந்து கொள்வதில் விரைவு காட்டானுயினன். இதனுல் அவர்கள் களவுக் காலத்துக் காதல் வாழ்வு நீளவும், புறத்தார்க்குப் புலகை வும் வழியாயிற்று; ஊரில் அலர் எழுந்தது ; தலைமகள் உயர்குடிப் பிறப்புடையாள் ; பிறர் கூறும் பழிச்சொல் அஞ்சும் பண்பினள்; தாயிற் சிறந்தது நாண் ; கற்குடி வந்தார்க்கு நானே நல்லுறுப்பாம் என எண்ணும் இயல் பினள் ; ஆதலின், அலர்உரை கேட்க அவள் உள்ளம்