உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. ஆவூர் மூலங்கிழார் பழந்தமிழ்ப் புலவர் வரிசையில் ஆவூர்கிழார், ஆஆர் மூலங்கிழார், ஐயூர்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன ; ஆவூர் மூலங்கிழார், ஐயூர் மூலங்கிழார் என்பவர் முறையே ஆவூரிலும், ஐயூரிலும் பிறந்து, மூலம் என்ற நாண்மீனுற் பெயர் பெற்றவராவர் என ஒரு சிலரும், ஆவூர் வேறு ; ஆவூர் மூலம் வேறு : ஐயூர் வேறு; ஐயூர் மூலம் வேறு ; ஆவூர் மூலம், ஐயூர் மூலம் என்பன ஊர்ப் பெயர்களாம் ; ஆகவே, இவர்கள் ஆவூர் மூலம், ஐயூர் மூலம் என்ற ஊர்களிற் பிறந்து கிழார் என்ற சிறப்பும் பெற்ற புலவர்களாவர் என வேறு சிலரும் கூறுவர். இதல்ை ஆவூர் மூலங்கிழார், எந்நாட்டினர், எவ்வூரினர் என்பதை அறிந்து கூறுதற்கில்லை. ஆவூர் மூலங்கிழார், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன் மாறன் என்ற இரு பெருவேந்தர்களையும், பாண்டியன் ரேஞ்சாத்தன், மல்லிகிழான் காரியாதி என்ற பெரு வீரர் களையும், சோளுட்டுப் பூஞ்சாற்றார்ப் பார்ப்பான் கெளனி யன் விண்ணந்தாயன் என்ற அந்தணர் ஒருவரையும் பாராட்டிப் பாடல்கள் புனைந்துள்ளார். இவையேயன்றி, கையறுநிலை, கானேமறம் போன்ற புறத்துறைப் பாடல் களும், வேறு சில அகத்துறைப் பாடல்களும் அவரால் பாடப்பெற்றுள்ளன. குளமுற்றத்துக் துஞ்சிய கிள்ளிவளவன் வரலாறும் பண்பும் முன்னர் ஆலத்தார்கிழார் ᎧajᎯᏛ©iᎱ.Ꮺif உரைத்தவழி உரைக்கப்பட்டுள; ஆதலாலும், மீண்டும் கோஆர்கிழார் வரலாறு உரைப்புழி, உரைக்கவேண்டியுளது ஆதலாலும், அவன் வரலாறு அனைத்தினையும் ஈண்டு ஒருமுறை கூற வேண்டுவதின்ம ஆகலின், அவன், ஆவூர் மூலங்கிழார் பால் கொண்டுள்ள தொடர்பினே விளக்கும் வரலாற்றுப் பகுதிகளேமட்டுமே கூறுவோமாக.