உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவூர்முலங்கிழார் மகளுர் பெருந்தலைச் சாத்தனர் 61 வாயாக எனக்கூறி, ஆண்டிருப்பினும் ஈண்டுளான் போன்றே எண்ணலாயினன்; தலைவன், தலைவி ஆகியோரின் இவ்விருபெரும் நிலைகளையும் நன்கு எடுத்துக்காட்டிக், காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழும் அன்பு வாழ்க் கையின் இயல்பினே அழகாக விளக்கிய புலவர், ஆவூர் மூலங்கிழார் மகனுர், பெருந்தலைச் சாத்தனரின் அறிவும், பெருமையும் அறிந்து பாராட்டற் குரியதன்ருே ? 'செல்க பாக! எல்லின்று பொழுதே ஐதுணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த திரிமரக் குரலிசை கடுப்ப வரிமணல் அலங்குகதிர்த் திகிரி ஆழி போழ வருங்கொல் தோழி! நம் இன்னுயிர்த்துணை எனச் சில்கோல் எல்வளை யொடுக்கிப் பல்கால் அருங்கடி வியனகர் நோக்கி வருந்துமால், அளியள்; திருந்திழை தானே.” - (அகம்: உஉச):