பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குட்டுவன் கண்ணணுர்

பிரிந்தவழிக் கண்ட காட்சி கனவாகத் தோன்றிற்று : அக்காட்சியில் அவளைத் தேற்றிப் பிரியத் தான்் வழங்கும் இன்புரைகளால் அவள் தேறினுளாகத் தோன்றிய கிலே யினைக் காணுங் காலத்தே கனவு அழிந்தது ; மீண்டும் வருத்தம் குடிகொண்டது , இந்த நிலையில் அவன் எவ் வாருே தான்் மேற்கொண்டு சென்ற வினேயினை முடித்துக்

கொண்டு விடு வந்து சேர்ந்தான்்.

வந்தான்ேக் கண்டு மகிழ்க்க தலைவி, தாங்கள் சென்ற வழியில், என்னையும் என் நிலையினேயும் எண்ணிப் பார்த் தலையாவது செய்ததுண்டோ? என்று கேட்டாள் ; அவன் தன் கினைப்பினனுயின் அவனுல் வினைமுடித்து மீளுதல் இயலாது ; அவனே வினைமுடித்து விரைவில் மீண்டுளன். ஆகவே, அவன் தன்னே எண்ணியிருத்தல் இயலாது என்ற எண்ணமுடையவளாதலாலும், தன்பால் கொண்ட அன் பின் மிகுதியிஞலேயே அவன் அரிதின் முயன்று விரைவில் வினே முடித்து வந்துளான் என்பதை அறியாளாதலாலும் அவ்வாறு கேட்டாள். அவ்வாறு அவள் கேட்டாளாக, அவன் வழியில் அவள் கினேவால் கனவிலும் வருந்திய வருத்த மிகுதியினே எடுத்துக்கூறி இவ்வாறு இருவர் உள்ளமும் ஒன்ருகவும், வேறுபடுத்திக் கூறுவது நன்றன்று என்றுகூறி மகிழ்வித்தான்்; இச் சின்னஞ்சிறு நாடகத்தைப் புலவர் நன்கு நடித்துள்ளார் தம் பாட்டின் வழி.

இதில் தலைவன் உள்ளம், ஒழித்தது பழிக்கும் உள்ளம் என உயர்த்திக் கூறுவது மிகவும் அழகுடையத்ாம். உலக நீதிகள் எல்லாம் இவற்றைச் செய்க எனச் சில விதிகளே விதிக்கும்; இவற்றைச் செய்யற்க எனச் சிலவற்றை விலக்கும் ; ஒன்றையே வற்புறுத்தற்பொருட்டு இதைச் செய்க எனவும், இதைச் செய்யாத ஒழியற்க எனவும் விதித்தல் வாய்பாடாகவும் விலக்கல் வாய்பாடாகவும் கூறும்; இவற்றுள் செய்யக் கூடாதனவே பலவாம் ; ஆதலின் தலைவனேக் கூறுங்கால், உயர்ந்தோர் கூடாதன. என ஒழித்தனவற்றைத் தான்ும் பழிக்கும் பண்புடை

யவன் என்று கூறிப் பாராட்டினர். -