பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் பாற் புலவர்கள்

- سب سمج مسیس۔

க. அஞ்சி அத்தைமகள் நாகையார்

நாகையார் என்பது இவர் இயற்பெயர்; அஞ்சி அத்தைமகள் என்பது அவர் உறவைக்குறிப்பது; உறவைக் குறிக்கும் தொடர்கள் புலவர் பெயர்களுக்குமுன் வழங் கப்படுவது அக்கால வழக்கமாம்: . தப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை யார், அளக்கர் ஞாழலார் மகனும் மள்ளனுர், கணக்காயனுர் மகனும் நக்கீரனுர் என்ற பெயர்களையும் நோக்குக. அத்தொடரால், அஞ்சி யென்பானுெருவனுடைய அத்தையின் மகள் நாகையார் என்பது பெறப்படும். தகடுரைத் தலைநகராகக்கொண்டு நாடாண்ட ஒர் அரசன் பெயர் அதியமான் நெடுமான் அஞ்சி என்பது; நாகையார், இவ்வதியமான் நெடுமானஞ் சியின் கடிய குதிரையையும், நெடிய தேரையும், பர்ணர் பலர் அவன் புகழ்டாடிப் பரவுவதையும், தன் பாட்டில் பாராட்டியுள்ளார். இவர் பெயசையும், பாட்டின் பொரு ளேயும் ஒருங்கே வைத்து நோக்கினுல், இவர் அவ்வஞ்சியின் அத்தை மகளே என்று உறுதிகொள்ளலாம். ஆகவே, அரசர்குடியிற் பிறந்த பெண்பாற் புலவர்களுள் இவரும் ஒருவர் என்பதும் உறுதிசெய்யலாம். இவர் பாடிய பாட் டாக மக்குக் கிடைத்திருப்பது அகங்ாலுாற்றில் காணப் படும் செய்யுள் ஒன்றே. . - - . . . .

அண்மையில் மணம்செய்து கொண்டவள் ஒருத்தி, கணவன் வீடுசென்று வாழ்ந்து வருகிருள்; அவள் உயிர்த் தோழி ஒருத்தி, அவள் அங்கே வாழும் வாழ்க்கையைக்