பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பேயனர்

' தவம்செய் மாக்கள் தம்முடம்பு இடாஅது

அதன்பயம் எய்திய அளவை மான.” (கூக-உ}

பெண்களுக்குரிய நலன்களுள், கனிசிறந்தது காணு. டைமையே; நானுடை மகளிர் கிமிர்ந்த தலையும், வீசிய கைகளும் உடையாய் நடத்தலறியார்; அவர் கவிழ்ந்த தலையினாாய்க், கால்விால் நோக்கும் கண்ணினாாய்ச் செல்லவே விரும்புவர் ; அங்கிலேயே அவர்க்கு அழகு கருவ தாம் ; பெண்களைப் பற்றிய இவ்வுண்மை, நம் புலவர்க்கும் உடன்பாடாம் என்பது, பொருநனைப் பின்தொடர்ந்து வரும் விறலியின் பல்வேறு உறுப்புக்களைப் பாராட்டி வருங்கால், அவள் கழுத்து, நாணத்தால் கவிழ்ந்து நலம் பெறும் கழுத்தாம் எனப் பாராட்டுவதால் புலனும்:

' காண் அடச் சாய்ந்த நலம்கிளர் எருத்து.” (ங்க)

உழவுத்தொழில் பற்றிய உணர்வு உடையவர் 5ம் புலவர் ; உழுகலப்பை இருவகைப்படும்; உழவர் என் செய் நிலத்தை உழும் கலப்பையைப் புன்செய் கிலத்தை உழ. மேற்கொள்ளார்; அவ்வாறே புன்செய் கிலத்தை உழும் கலப்பை, நன்செய் கிலத்தை உழப் பயன்படாது; தன் செய் நிலம் சேறுடையது ஆகலின், அதை உழும் கலப்பை விரைவில் தேய்ந்து பயனற்றுப்போதல் இல்லை; மாருக, புன்செய் கிலம், நீரற்றும், கற்கள் நிறைந்தும் காணப்படு வதால், அதை உழும் கலப்பை விரைவில் தேய்ந்த பய னற்றுப்போகும். இதை நன்கு உணர்ந்த புலவர், கரிகாலனே அடைந்து வாழும் பொருகன், இாவும் பகலும் இறைச்சி கலந்த உணவே உண்டமையால் அவன் பற்கள் இறைச்சியை மென்று மென்று தேய்ந்தபோதற்குக் கொல்லையை உழுத கலப்பை தேய்ந்து போவதை உவமை காட்டியுள்ளார்:

' கொல்லே உழுகொழு ஏய்ப்பப் பல்லே

எல்லேயும் இரவும் ஊன்தின்று மழுங்க.” (ககன-அ) முடத்தாமக் கண்ணியார்தம் புலமை நலத்திற்கு: அவர் எடுத்தாளும் உவமைகளும் சான்று. பகர்ந்து