பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:110 பேயனர்

'ஞெமை யோங்கு உயர்வரை இமயத்து உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் கங்கை அம் பேர் யாற்றுக் கரையிறந்து இழிதரும் சிறையடு கடும்புனல் அன்ன என் நிறையடு காமம்.” (நற் : க.சு.க)

தமிழகத்தின் தெருவுகளில், தமிழ் இளஞ்சிறுவர்கள், தம் கால்களில் கட்டிய கிண்கிணி ஒலிக்க, நடை தேர் உருட்டி நடை பயிலும் நல்ல காட்சிகளையும், பொருளொடு படா அவர்தம் வாய்ச் சொற்களைக் குழலினும், யாழினும் இனிமையுடையதாக் கேட்டு மகிழ்ந்து, அவர் தம் மலர் போலும் வாயினின்றும் வடியும் நீரால், தம் மார்பிற் பூசிய சந்தனம் சிதையுமாறு அன்பொழுக எடுத்தணேக்கும் அவர்தம் தந்தைமார் அன்பின்பெருக்கையும் புலவர் அழகொழுகக் காட்டியுள்ள காட்சியினே அவர் பாட் டொன்றில் கண்டு களிக்கலாம் ;

அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத், தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன் பூங்ாறு செவ்வாய் சிதைத்த சாந்தம்.”

(நற்: உடுo)