உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5磐 மாநகர்ப் புலவர்கள்

குடக்கோ நெடுஞ்சேரலாதனும், " வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போரிட்டு இருவர் படையும் அழிய இருவரும் களத்திலேயே மாண்டு மடிந்தனர்; களம் நோக்கி வந்த யானேகள் அனைத்தும் மடிந்து மலேபோல் வீழ்ந்து கிடக்கின்றன ; வெற்றியன்றித் தோல்வி கண் டறியாக் குதிரைகள் எல்லாம், தம்மீது ஏறிய வீரர்கள் அழியத் தாமும் அழிந்து வீழ்ந்துவிட்டன தேர் வீரர் கள், தேர்த்தட்டுகளிலேயே தலே இழந்து இறந்து கிடக் கின்றனர். போர் முரசுகள் முழக்குவாரின்றி வறிதே விடப்பட்டுள்ளன. இரு பெரும் அரசர்களும் மார்பில் வேலேற்று வீழ்ந்து கிடக்கின்றனர் ; அவ்வேந்தர் தம் உரிமை மகளிரும் கைம்மை நோன்பு மேற்கொண்டு. வாழும் கருத்திலராய்த் தம் கணவர் மார்பகத்தே வீழ்ந்து மடிந்து கிடக்கின்றனர்; இக்கொடிய காட்சியைக் கிண்டார் புலவர் கழாத்தலையார் ; இவர்கள் கிலேயே இதுவாயின், இனி, போர் மேற்கொண்டு பேரந்து கின் தூசிப் படை வினே அழித்து வென்றி எய்துவேம் எனக் கூறல் எவர்க்கு இயலும்? அவ்வாறு எண்ணுவார் எண்ணம் என்னும் : என்று எங்கி கின்றார்,

'வருதார் தாங்கி அமர்மிகல் யாவது !' (புறம்: சுஉ) களத்தே வீழ்ந்து கிடந்தாருள், • . . . . . நெடுஞ்சேரலாதன் கழுத்தில் அழகிய ஆரம் ஒன்று மின்னிக் கிடப்பதைக்கண்ட புலவர், அது, ஆங்கு வரும் பாணர்க்குப் பரிசாக அளிக்க அணிந்துவந்த அணியோலும் என்று எண்ணினர் பாணர், வெற்றிபெற்ற வேந்தரைப் பாடி, அவ் வேந்தர் ஆங்குக் கைக்கொண்ட யானை, குதிரை, தேர் முதலாம் பொருள்களைப் பெற்றுச் சேறல் வழக்கமாம்; இந்தப் போர்க்களத்தில் இருவர் படையும் அறவே அழிந்து விட்டமையால் பாணர்க்குப் பெறலாம் பொருள் ஏதும் இல்லை. எனவே, அவர்களுக்கு, நெடுஞ்சேரலாதன் கழுத்து - ஆரம்ஒன்றே அகப்படலாயிற்று அதைக்கண்ட பாணர்கள், யாங்கள் ஈண்டு வந்தது. இந்தக் கொடுங் காட்சியினச் காண்வா: கின் கழுத்தில் கிடக்கும். இதைக் கொள்ளவா?