பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 5 வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி பணைகிலைப் பு:ாவியின் அனைமுதற் பிணிக்கும் கழிசூழ் படப்பை.” பெருந்துறைகளில் வந்து செல்லும் பிறநாட்டுக் கப்பல் களின் கிலையினை, - 'யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னெடு வந்து கறியொடு பெயரும்.” என ஒரு பாட்டு விளக்கும். கடல் வாணிபம் செழிக்க இருந்த காணத்தால் தமிழகத்தின் பேரூர்களில் உள்நாட்டு வாணிபமும் நன்கு வளம்பெற்று விளங்கிற்று. பேரூர்களின் கடைவீதிகளில், 'நீரின் வந்த நிமிர்பரிப்புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும், வடமலைப் பிறந்த மணியும், பொன்னும் குட மலைப் பிறந்த ஆரமும், அகிலும், "குடகடல் பிறந்த படர் கொடிப் பவழமும், தென்திசைப் பிறந்த வெண்சுடர் மணி யும், இலங்கை ஈழத்துக் கலம்தரு செப்பும், "கங்கை வாரியும், காவிரிப்பயனும்” “ஈழத்து உணவும், காழ கத்து ஆக்கமும்” என்ற வெளிநாட்டுப் பொருள்கள் வேண்டும்ளவு வந்து குவிந்து கிடக்கும். நூலாலும், மயிா அம், பட்டாலும் நெய்யப்பெற்ற நுண்ணிய ஆடைகளை விற்போரும் ; பட்டு, பவளம், சந்தனம், அகில் முத்து, மணி, பொன் ஆகியவற்றைத் தனித்தனியே குவித்து வைத்து விற்போரும் ; நெல், புல், வரகு முதலாம் கூலங் களைக் கூறிட்டு வைத்து வாணிபம் புரிவோரும் ; காழியர், கூவியராய அப்பம் விற்போரும், கள் விற்போரும் மீன்விலை பகர்வோரும், வெள்ளுப்புவிற்போரும், வெற்றிலே விற்கும் பாசவரும் முதலாம் வணிகர்கள் வரிசையாக இருந்து வாணிபம் புரிவர். வாழ்க்கைக்குத் தேவையாம் இப் பொருள்களே அல்லாமல், நாகரிக வாழ்க்கையினர் வேண்டி கிற்கும், வண்ணம், சுண்ணம், தண்ணறும் சாந்தம், அகில், ஆரம், கற்பூரம் முதலாய பொருள்களும் உண்டு.