பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கம் தமிழகத்தை எங்கே சென்று காண்கின்முேம் சங்கநூல் பெருங்கடலில். அந்நூல்களை ஆக்கித் தந்த புலவர்கள் பல்வகை மரபினராவர். அவர்களுள், கொள்வது உம்மிகை கொளாது, கொடுப்பதாஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும் வணிகர்களும் புலமைக் கிழமைகொண்டு வாழ்க் தனர். அவர்தம் வரலாற்றை நிரல்படக் காண்பதே இந்நூலின் உட்கிடை. - இதில் உறையூர் இளம்பொன் வணிகனுர் முதல், கணியன் பூங்குன்றனுர் ஈருக, இருபத்தெண்மர் வா லாறுகள், அவர்தம் பாக்களின் துணைகொண்டே வரையப் பெற்றுள்ளன. இதற்கு வணிகரிற் புலவர்கள் என்னும் பெயரீந்து சங்கத்தமிழ்ப்புலவர் வரிசையில் ஒன்பதாவதாக வெளியிட்டுள்ளோம். இதனையும் புலவர் .திரு. கா. கோவிந்தன் அவர்கள் ஆய்ந்து தெளிவுற ஆக்கி யுதவியுள்ளார்கள். இதற்கு வணிகரிற் புலவர்கள் என்று பெயர் அமைத் திருப்பினும் இடைப்பிற வாலாக மருத்துவன் தாமோ தானர், உறையூர் முதசாத்தனர் என்னும் பிற தொழில் மேற்கொண்ட புலவர் பெருமக்கள் வரலாறுகளும், இடம் பெற்றுள்ளன. இந்நூலயும் இதைத் தொடர்ந்து மேல்வரும் இல், வரிசை நூல்களையும் தமிழகமாந்தர்கள் வாங்கிக்கற்று கலம்பல பெறுவார்களென நம்புகின்ருேம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.