பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 3 பெரிய அளவில் நடைபெற்று வந்தது என்பதை அறியுங் கள். தமிழ்நாடு, உரோம் முதலாம் நாடுகளுக்கு அனுப்பிய பொருள்கள், மிளகு, முத்து, தந்தம், பருத்தி போன்ற விலையுயர்ந்த பொருள்களேயாம்; இவற்றைப் பெரும்பாலும் பொன்னுக்கும், வெள்ளிக்குமே விற்றனர்; சிறுபான்மை யாகக் கண்ணுடியாலாய பொருள்கள், மணம்சாறும் மதுப் போன்ற பொருள்களைப் பெற்றனர். இச் செய்திகளை அறிவிப்பதோடு, அம் மேட்ைடு அறிஞர்கள், தமிழர்கள் தம் கடல் வாணிபத்திற்குத் துணையாகப் பெற்றிருந்த கப்பல்களின் வகைகளையும் நன்கு அறிந்து கூறியுள்ளனர். தமிழர்களிடம், கரையோரப் போக்குவரவிற்காம் சிறிய கப்பல்களும், பெரிய கப்பல்களும் இருந்தன; கடல்கடந்து செல்லத்தக்க மிகப் பெரிய கப்பல்களும் இருந்தன என்றும், கடல் ஒரம் செல்லத்தக்கனவும், பல மரங்கள்ால் இன யுண்டனவும் ஆய கப்பல்களுக்குச் “ சங்கரா' (Sangara) என்றும், கங்கைமுதலாம் நாடுகளுக்குச் செல்லும் மிகப் பெரிய கப்பல்களுக்குச் சோழங்கி' (Colandia) ατὰ φύ பெயராம் என்றும் அவர்கள் தங்கள் நூல்களில் எழுதி வைத்துள்ளனர். உரோமப் பேரரசன் அகஸ்டஸ் காலத்தில் பாண்டிநாட்டரசனிடமிருந்து அரசியல் தூதுவர், அவ் அகஸ்டஸ் அவைக்கு வந்திருந்தனர் என்றும் கூறியுள்ள னர். அவர்கள், தமிழகத்தின் தலைசிறந்த கடற்கரைப் பட்டினங்களாகிய, தொண்டி, முசிறி, கொற்கை, புகார் போன்ற இடங்களையும், அவற்றின் இயல்பினையும் நன்கு அறிந்து கூறியுள்ளனர். இவ்வாறு பிறநாட்டு அறிஞர் களால் பாராட்டிக் கூறப்பெறும் தமிழர்களின் வாணிபச் சிற்ப்பினே வலியுறுத்தும் சான்றுகள் பல தமிழ்நூல் களிலும் உள்ளன. பத்துப் பாட்டினுள், பட்டினப்பாலையும், மதுரைக் காஞ்சியும், ஐம்பெரும் காப்பியங்களுள், சிலப்பதிகாரமும் மணிமேகலையும், தமிழ்நாட்டின் வாணிபச் சிறப்பினையும், அதற்குத் துணையாம் தொழில் வளத்தினையும் விளங்கக் கூறியுள்ளன.