பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சங்க இலக்கியத்தில் உவமைகள்

இதில் காலம் மட்டுமே அல்லாமல் இடச் சார்பும் அமைந் துளளது.

1.8.2. இவ்வாறே பெரும் பொழுதுகளாகிய வேனில், மாரிப்பருவம், தைத்திங்கள், கூதிர்க்காலம், கொண்டல் பொழுது, கோடைப்பருவம் முதலியன தொடர்பு பெறு கின்றன.

1.8.2.1. வேனில் பருவத்தோடு தொடர்பு பெற்ற உவமைகள் பின்வருமாறு:

1. வேனில் முருக்கு :

வேனில் முருக்கின் வினைதுணர் அன்ன மாணா விரல வல்வாய்ப் பேய். -நற். 73/1-2

2. வேனில் ஒதி

வேனில் ஒதிப் பாடுநடை வழலை வரிமரல் நுகும்பின் வாடி. -நற். 92/2-3

3. வேனில் பாதிரி மலர்:

வேனில் பாதிரிக் கூன்மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை. -குறு. 141/1-2

4. வேனில் புனல்:

வேனில் புனலன்ன நுந்தையை நோவார் யார் -84/8

5. வேனில் ஆனேறு:

வேனில் ஆணேறு போலச் சாயினன் என்ப நும்மாண் நலம் நயந்தே. -குறு. 74/4-5

6. வேனில் காலத்து அணிலின் வால்:

வேனல் வரியனில் வாலத்து அன்ன கானயூகின் கழன்றுகு முதுவீ: -அகம். 307/4-15

7. வேனில் காலத்தும் கோங்கம் பூவின் பொகுட்டு:

வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன குடந்தையஞ் செவிய கோட்டெலி. -புறம். 321/4-5

8. வேனில் பருவத்துக் குயில்:

அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் கெளவையிற் பெரிதே. -ஐங். 369/3-5