பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயக்‌ காட்சி-3 படம்‌ பிடித்தவர்‌:

இளம்பெரும்வழுதி கோடி, கோடி கோடானு கோடி மக்கள்‌ உலகில்‌ வாழ்கிறார்கள்‌. குரத்திற்கு.ம்‌ தன்மைக்கும்‌ தக்கபடி ஒவ்வொருவருக்கும்‌ ஓர்‌ ஐயப்பாடு முளைக்‌ கிறது. சங்ககாலத்‌ தமிழகத்தில்‌ ஓர்‌ அரசன்‌. புவியரசன்‌

மட்டுமல்ல,

கவியரசனும்கூட.

அவன்‌ அவன்‌

பண்டைய கிரேக்க நாட்டுத்‌ தத்துவஞான மன்னன்‌ (Philosopher king) மாதிரி--இதிகாசக்‌ கதையில்‌ “மிதிலை எரிந்திட வேதப்பொருளை வினவும்‌ சனகன்‌” ” போன்ற ராஜரிஷி. இந்தப்‌ புவியரசக்‌ கவியரச னுக்கு ஒரு விசித்திரமான ஐயப்பாடு முளைக்கிறது.

“உலகம்‌

இருக்கிறதா?

இல்லையா?”

என்பது

தான்‌ அந்த ஐயப்பாடு.

இது, சான்றாண்மை சான்ற அப்பெரியாரின்‌ வாழ்வில்‌ **இரு நிலம்பிளக்க வேர்‌ வீழ்ந்த” ஐயப்‌ பாடு. நீண்ட நெடிய காலமாக அவர்‌ வாழ்வை அடிமுதல்‌ முடிவரை குலுக்கி எடுத்த ஐயப்பாடு. இந்த ஐயப்பாடு அல்லும்‌ பகலும்‌ அனவரதமும்‌ விநாடிக்கு விநாடி அவர்‌ உள்ளத்தைக்‌ குடைந்து கொண்டே இருக்கிறது, 14