பக்கம்:சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

சங்க கால புலவர்கள் இயற்றிய பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அக்கால சமுதாய் நோக்கு இப்புலவர்களிடம் எவ்வாறு காணப்பட்டது என்பதனை சுவைத்துக் காட்டியும், அவர்கள் படம் பிடித்துக் காட்டிய சமுதாயக் காட்சியினையும் தோழர் ஜீவா கருத்துச் செறிவுடன் இந் நூலில் சித்தரித்துள்ளார்.

பசியும், நீங்காத பிணியும், வெளிப்பகையும், இன்ன பிற தீங்குகளும் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்திக் கூறும் 'நாடு' என்னும் குறள் அதி காரத்தையும் இதில் ஆராய்ச்சி செய்துள்ளார் ஜீவா.

'சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்' எனும் இச்சிறு நூல், சங்க கால புலவர்களின் சமுதாய நோக்கினை அறிவதற்கு நல்வாய்ப்பினைத் தருகிறது. பதிப்பகத்தார்