இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
174
கனி | : | ஒரு விதைவுள்ள (பெர்ரி) சதைக்கனி, 2 வித்திலைகள் தடித்தவை. சூல்முளை மேலானது. |
வேப்ப மரம் மிகச் சிறந்த வலிமை வாய்ந்த மரம். கட்டிட வேலைக்குப் பயன்படும். பட்டை, இலை, மலர், விதை முதலியவற்றில் வேப்ப எண்ணெய் உள்ளது. எண்ணெய், உணவுக்கும், விளக்கெரிக்கவும், மருந்துக்கும் பயன்படுகிறது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n= 30 என மேன்ஜெனட், எஸ் , மேன்ஜெனட், ஜி, 1958, 1962 என்போர் அறுதியிட்டனர்.