இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
சங்க இலக்கியத்
சண்பகம் தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | தாலமிபுளோரே (Thalamiflorae) |
தாவரக் குடும்பம் | : | மக்னோலியேசி (Magnoliaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | மைக்கீலியா (Michelia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | சம்பகா (champaca, Linn) |
தாவர இயல்பு | : | மரம்; கிளைத்துப் பரவி ஓங்கி வளரும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் என்றும் பசிய பெரிய இலைகளையுடையது. |
இலை | : | இலையடிச் செதில்கள் இலையைத் துளிரிலேயே மூடியிருக்கும்; இலை 10-12 செ. மீ. நீளமானது. மேற் புறத்தில் அகன்றது. |
மஞ்சரி | : | தனி மலர், இலைக் கோணத்தில் நுனியில் மலருண்டாகும். |
புல்லி வட்டம் | : | இது அல்லிவட்டத்தைப் போன்றதே. 3 புறவிதழ்கள். |
அல்லி வட்டம் | : | இது 6 அகவிதழ்கள்; மஞ்சள் நிறமானவை. இரு அடுக்காக இருக்கும். இதழ்கள் பிரிந்த மலர். |
மகரந்த வட்டம் | : | பல தட்டையான தாள்களை உடையது. தாதுப் பை ஒட்டியிருக்கும்: உட்புறமாகத் தாது உகுக்கும். |
சூலக வட்டம் | : | சூலக அறைகள் நீண்ட நடுத்தண்டில் நேரடியாக ஒட்டியிருக்கும். சூல்முடி உள்வளைந்திருக்கும். தொங்கும் 2 சூல்கள் ஒவ்வொரு அறையிலும் காணப்படும். |
கனி | : | நீண்ட மேல்புறம் வெடிக்கும் ‘காப்சூல்’ போன்றது. |