பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது457

இலைப் பரப்பு : பசிய மெல்லிய இலைகள் அடியில் நுண்மயிர் காணப்படும். இளம் இலைகளில் இரு புறத்திலும் நுண்மயிர் உண்டு.
நடுநரம்பு : இலை அடியில் இரு பெரு நரம்புகள் பக்கத்திலும் விளிம்பு வரை நீண்டிருக்கும். நடுநரம்பு இலையடியில் பருத்துத் தோன்றும்.
மஞ்சரி : 3-1 மலர்களை உடைய ‘சைம்’ நுனி வளராப் பூந்துணர். நடு மலர் முதலில் பூக்கும்.
மலர் : பெரியது. அரும்பு 15-25 மி.மீ. நீளமும், 10-15 மி.மீ. பருமனும் உள்ளது; வெண்மையானது.
புல்லி வட்டம் : 4-5 பசிய புறவிதழ்கள் அடியில் இணைந்து, .மேலே விளிம்புகளை உடையது.
அல்லி வட்டம் : 4-5 அகவிதழ்கள். அடியில் இணைந்து, ஒன்றின் மேல் ஒன்றாய் 3-5 அடுக்குகளாக இருக்கும். சிறந்த நறுமணம் உடையது.
ஏனைய இயல்புகள் : காணவில்லை.