பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

576

சங்க இலக்கியத்

மெலைனா ஏஷியாட்டிகா என்றழைப்பர். இது வர்பினேசி என்ற தாவரக் குடும்பத்தில் சேர்க்கப்படும். இக்குடும்பத்தில் 80 பேரினங்களும், 800 சிற்றினங்களும் வெப்ப நாடுகளில் உள்ளன. இவற்றுள், இந்தியாவில் 23 பேரினங்கள் வளர்கின்றன. மெலைனா என்ற குமிழின் பேரினத்தில் 5 சிற்றினங்கள் உள்ளன என்பர் ஹூக்கர். தமிழ் நாட்டில் இக்குடும்பத்தில் 13 பேரினங்களும், மெலைனா பேரினத்தில் 2 சிற்றினங்கள் மட்டும் காணப்படுவதாகக் காம்பிளும் கூறுவர்.

குமிழத்தின் குரோமோசோம் எண்ணிக்கை, 2n = 38 என்று இராமன், கேசவன் (1963 அ) என்போரும், 2n = 40 என்று சாப்தி, சிங் (1961) என்போரும் கணக்கிட்டனர்.

குமிழின் பழம் மருந்துக்கு உதவும் என்பர்.

குமிழ் தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அல்லி இதழ்கள் இணைந்த
பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : வர்பினேசி (Verbenaceae)
தாவரப் பேரினப் பெயர் : மெலைனா (Gmelina)
தாவரச் சிற்றினப் பெயர் : ஏஷியாட்டிகா (asiatica,Linn.)
தாவர இயல்பு : பல்லாண்டு வாழும் புதர்ச் செடி. 2-3 மீ. உயரமாகக் கிளைத்து, வளரும் சிறு மரமெனலாம்.
தாவர வளரியல்பு : ஸீரோபைட் (xerophyte) பாலை நிலத்தில் வளரும் தாவரம். 1000 மீட்டர் உயரம் வரையிலான குன்றுப் பகுதிகளில் வளர்கிறது. சிறு முட்களை உடையது.
இலை : சிறு தனியிலை 3-4 செ.மீ. X 2-3 செ.மீ. முட்டை வடிவானது. பளபளப்பானது.