பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

இலை : அடியில் சிறு வட்டமான சுரப்பிகளை உடையது. சிறு காம்புடையது. கிளைக் குருத்து முள்ளாதல் உண்டு.
மஞ்சரி : நுனிவளர் பூந்துணரில் 2-3 பெரிய மலர்களும், மொட்டுகளும் காணப்படும். பூங்கொத்து கிளை நுனியிலிருந்து தொங்குவதுண்டு.
மலர் : அல்லியிணைந்தது. சற்று வளைந்த புனல் வடிவானது. மடல் மேற்புறத்தில் விரிந்திருக்கும்.
புல்லி வட்டம் : 4 பசிய இதழ்கள் இணைந்து, குழல் வடிவாக இருக்கும். சுரப்பிகள் காணப்படும். மேலே 4 விளிம்புகள் உள்ளன.
அல்லி வட்டம் : நல்ல மஞ்சள் நிறமான அல்லியிதழ்கள் ஐந்தும் அடி முதல் இணைந்து, மேலே சற்று வளைந்த புனல் போன்றிருக்கும். மலரின் கீழ்ப்புறத்தில் 3 இதழ்களும் நன்கு இணைந்து சற்று நீண்டும், மேற்புறத்து இரு இதழ்கள் இரு பக்கங்களில் சிறு மடல் விரிந்தும் இருக்கும்.
மகரந்த வட்டம் : 4 குட்டையான மகரந்தத் தாள்கள் இரு வேறு நீளத்தில் 2.2 ஆக மலருக்குள் அல்லியொட்டி இருக்கும். தாதுப் பைகள் நீண்டு தொங்கும் இயல்பானவை.
சூலக வட்டம் : 2-4 சூலிலைச் சூலகம். ஒரு சூல் வளர்ந்து ஒரு விதை மட்டும் உண்டாகும். சூல்தண்டு இழை போன்றது. சூல்முடி இரு பிளவானது.
கனி : மஞ்சள் நிறமான் சதைக்கனி ட்ரூப் எனப்படும். விதை சற்று நீளமானது.

இது சிறுமரம், வலியது, விறகுக்கும், வேலிக்கும் பயன்படும். இதன் கனியைக் குழைத்துத் தலையில் தடவ, தலையில் உள்ள பொடுகு போகுமென்ப.