பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

தில்லை
எக்ஸ்கொகேரியா அகலோச்சா
(Excoecaria agallocha,Linn.)

கபிலர், ‘தில்லை, பாலை, கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) என்று ‘தில்லை‘ மலரைக் குறிப்பிட்டார். தில்லை என்பது ஒரு சிறுமரம். கடலோரத்திலுள்ள உப்பங்கழியில் வளரும். இந்நாளில் சிதம்பரம் என வழங்கும் ஊருக்குத் தில்லை என்பதுதான் பழைய தமிழ்ப் பெயராகும்.

தில்லை என்னும் இச்சிறுமரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித் தனியாக உள்ளன. மரத்தில் வடியும் ஒரு வகையான ‘பால்’ மிகக் கொடிய நஞ்சுடையது. இதன் பூக்களையும் இம்மரத்தையும் யாரும் நாடுவதில்லை.

சங்க இலக்கியப் பெயர் : தில்லை
உலக வழக்குப் பெயர் : தில்லை மரம்
தாவரப் பெயர் : எக்ஸ்கொகேரியா அகலோச்சா
(Excoecaria agallocha,Linn.)

தில்லை இலக்கியம்

தில்லை என்பது ஓர் அழகிய சிறுமரம். எப்போதும் பசிய நிறமுள்ளதாக இருக்கும். இது உப்பங்கழித் தாவரம். தில்லை மரக் காடு சூழ்ந்திருந்த ஊருக்குத் தில்லை என்று பெயர். மணிவாசகர், ‘தில்லை மூதூர் ஆடிய திருவடி’[1] என்பார்.அங்கே திருச்சிற்றம்பலம் தோன்றி, அணிகொள் தில்லை ஆயிற்று. இப்போது ‘சிதம்பரம்’ எனப்படும். சிதம்பரத்திற்குக் கிழக்கே 15 கி.மீ. தொலைவில், இன்றைக்கும் தழைத்து ஓங்கும் தில்லை

 

  1. திருவாசகம் : கீர்த்தித் திருவகவல் : 1
 

73–40