பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/651

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

635

தாவர வளரியல்பு : மீசோபைட். இதன் காய்க்காக வளர்க்கப்படுகிறது. அத்திக்காயும் பழமும் உணவுப் பொருள்கள்.
இலை : தனியிலை. நீண்டு, அகன்ற, பசிய, பெரிய இலை. சற்றுச் சொரசொரப்பாகவும், அடியில் நுண்மயிர் நிறைந்தும் இருக்கும். இலைக் கோணத்தில் இதன் மஞ்சரி 2 கோள வடிவானது. அத்திப் பிஞ்சுகள் உண்டாகும்.
மஞ்சரி : இதற்குக் ‘கோளிகள்’ என்று பெயர். இதற்குள்ளே நூற்றுக்கணக்கான மலர்கள் உட்புறச் சுவரில் ஒட்டியிருக்கும்
மலர் : அத்தியில் மூன்று அல்லது நான்கு வகையான மலர்கள் உண்டாகும். ஆண் மலர், பெண் மலர், அலி மலர், மலட்டு மலர்-ஒருவகை அத்தியில் ஆண் மலடு, பெண் மலடு ஆன மலர்கள் உண்டாகும். இரு பாலான மரங்களிலும் உண்டாகும்.
ஆண் மலர் : இரு அகவிதழ்களையும், இரு மகரந்தத் தாள்களையும் உடையது.
பெண் மலர் : இரு அகவிதழ்களும், சூலகமும் கர்ணப்படும். ஒரு சிற்றினத்தில் சூல்தண்டு குட்டையாகவும், நீண்டும் இருப்பதுண்டு. பொதுவாக, அத்திப் பிஞ்சாகிய பூங்கொத்தில் ஆண் மலர்கள் மேற்புறத்திலும், பெண் மலர்கள் அடிப்புறத்திலும் உண்டாகும். இணரின் (பிஞ்சு) மேற்புறத்தில் சிறு துளை இருக்கும். இதன் வழியாக வண்டினம் உள்ளே புகுந்து மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்தும். இணராகிய கோளி பிஞ்சாகி, காயாகிப் பழமாகும்.
கனி : செந்நிறமானது. உணவாகப் பயன்படும் அத்திமரங்கள், இதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகின்றன. பசிய கனிகளும் உண்டு.