பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள்

135


...........சாரற்
சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே

-குறுந்தொகை 18:3-5

நல்ல பசுவின் இனிய பாலானது அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையிற் சிந்தி வீணானது போல, தலைமகளின் மாமையாகிய பேரழகு, அவளுக்கு அழகு பயந்து நிற்ப தாகாமலும், அவள் தலைவனுக்கு இன்பம் பயவாமலும் பசலையானது உண்ணுதற்கு இடமாகப் போகின்றது என்ற கருத்தை உள்ளடக்கிய பாடல் உவமை நலத்தால் சிறந்து விளங்குகின்றது.

கன்று முண்ணாது கலத்திலும் படாது
நல்லான் தீம்பால் நிலத்துக் காங்கு
எனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீ இயர் வேண்டும்
தீதிலை யல்குலென் மாமைக் கவினே

-குறுந்தொகை.27


வாழ்வில் முன்பின் தொடர்பு ஒரு சிறிதும் இல்லாத தலைமகனும் தலைமகளும் ஊழ்வயத்தால் எதிர்ப்பட்டுக் கூடி மனம் ஒன்றுபடுதலைச் செம்மண் பூமியில் விழுந்த மழைநீர் செம்மண் நிறத்தைப் பெறுதலுக்கு உவமை காட்டிய புலவர் செம்புலப் பெயனிரார்’ எனப்பட்டார்

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு எம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனிர் போல
அன்புடை நெஞ்சங் தாங்கலக் தனவே

-குறுந்தொகை-40