பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 177

வந்தன. இத் துறைமுகத்தில் நெருங்கிக் கிடந்த பொருள்களாக,

மீனொடுத்து நெற்குவைஇ மிசையம்பியின் மனைமறுக்குந்து மனைக்குவைஇய கறிமூடையாற் கலிச்சும்மைய கரைகலக்குறுந்து கலந்தந்த பொற்பரிசம் கழித்தோணியாற் கரைசேர்க்குந்து மலைத்தாரமுங் கடற்றாரமும் தலைப்பெய்து வருகர்க்கீயும்

-புறம். 343:1-8 யவனர் கொண்டு வந்த மரக்கலங்கள் பொன்னொடு முசிறிக்கு வந்து மிளகொடு மீளுவதை,

யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

என்னும் அகநானூற்று அடிகளால் உணரலாம்.

குட்ட நாட்டிலிருந்து வந்த முத்தும், மிளகும், யானைத் தந்தங்களும் பட்டும் இரத்தினமும் ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது வரலாற்றாசிரியர் கருத்து.

3. கொற்கை

பாண்டியரின் சிறந்த துறைமுகம். முத்துக்குப் பெயர் பெற்ற இடம். இக்கொற்கையினை மதுரைக் காஞ்சி,

விளைந்துதிர்ந்த விழுமுத்தின் இலங்குவளை இருஞ்சேரிக் கட்கொண்டிக் குடிப்பாக்கத்து நற் கொற்கையோர் நசைப்பொருங்

-மதுரை. 185-188

என்று குறிக்கின்றது.