பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 99

பாடாண்திணையின்கண் இயற்பெயர் இடம்பெறுமாற்றை ,

மெய்ப்பெயர் மருங்கின் வைத்தனர் வழியே என்ற தொல்காப்பிய நூற்பா விளக்கி நிற்கிறது.

இவ்வாறாகத் தொல்காப்பியனார் ஒன்பது நூற்பாக்களில் பாடாண் பாட்டினை விளக்கிச் செல்ல புறப்பொருள்வெண்பா மாலை ஆசிரியர் ஐயனாரிதனார்,

ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும்

அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று என்ற ஒரே கொளுவின் மூலம் உணர்த்திச் செல்கின்றார். அதாவது ஒரு மன்னனுடைய புகழும் வலியும் பொருளைத் தனக்கெனப் பாதுகாத்துக் கொள்ளாத வள்ளன்மையும் அருளுடைமையும் என்று கூறப்பட்ட இவற்றை ஆய்ந்து கூறுவது பாடாண்திணை என்பது இதன் பொருள்.

பாடாண்திணையின் துறைகள்

பாடாண்திணையின் துறைகளைப் பற்றித் தொல் காப்பியர் இரண்டு நூற்பாக்களில் கூறிச் செல்கின்றார். முதல் நூற்பாவில் பத்துவகைத் துறைகளைக் குறிக்கின்றார்.

1. கொடுப்போர் ஏத்தக் கொடார்ப் பழித்தல்.

2. வெற்றிச் சிறப்பாலும் குணச் சிறப்பாலும் உயர்ந்து நிற்போரைப் புகழ்ந்து கூறும் இயன்மொழி வாழ்த்து. 8. சேய்மைக்கண்ணின்று வருகின்ற வருத்தம் தீர

வாயிற்காவலருக்கு உரைத்த வாயில் நிலை.

1. அரசன் இனிது துயில்கின்ற நிலைகூறும் கண்படை

நிலை.

8. கபில நிறப் பசு வினைக் கொடுக்கக் கருதிய வேள்வி

நிலை.