பக்கம்:சங்க கால மகளிர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

57

இதுகாறும் கூறியவற்றால் சங்க கால மகளிர் தம் பல்வேறு வாழ்க்கைக் கூறுகளின் துட்பங்கள் அறியப் பெற்றன.

உயர்ந்த நற்குணம் வாய்ந்த பெண் அவள் கணவனுக்கு முடியாக விளங்குகிறாள் என்பதும் பெற்றாம்' 142.

மனைவி என்பவள் ஒர் ஆடவனுக்கு, தொடக்கமாகிய இளமைக்காலத்தில் தலைவியாகவும், நடுத்தர வயதில் துணைவியாகவும், முதிய பருவத்தில் உடல்நலம் பேணும் செவிலியாகவும் விளங்குகின்றாள்.'143

'அதிர்ஷ்ட தேவதை எல்லா வகையான செல்வப் பேறுகனையும் வழங்க முடியும்; ஆனால் மனைவி என்பவர் வானுலகம் வழங்கும் வற்றாத பெருமைக்குரிய சிறந்த பரிசு’ என்பர் அறிஞர். '144

'ஓ பெண்ணே! காதற் பெண்னே! ஆணின் மனத்தைத் திருத்திப் பக்குவப்படுத்த இயற்கை உன்னைப் படைத் தளித்துள்ளது. நீயின்றேல் ஆண்வர்க்கமாகிய நாங்கள் எல்லாம் மிருகங்களாக இருந்திருப்போம்' என்கிறார் ஒட்வே என்பவர். 145

142 . ”A Virtuous vvorman is a crown to her husband"-Old Testament Proverbs, XII, 4.

143. “Wife's are young men's mistresses, compani

ons for middle age , and old men's nurses". -Francis Bacon, on marriage and simple life.

144. “All other goods by Fortune's hands are given A wife is the peculiar gift of heaven” — Рope; January and Мау.

145. “O Woman I lovely woman l Nature made thee

to temper man; We had been brutes without you"—Otway, Venice Preserved, I —1.