4
யால்தான், ஆளுடைய நம்பியாகிய சுந்தரர் தம் திருப்பாட்டில், "கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை," என்று இவன் கொடுக்கும் ஆற்றலைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
பாரி இன்னார்க்கு இது கொடுத்தல், இன்னார்க்கு இது கொடுத்தல் ஒண்ணாது என்று எண்ணும் இயல்பினனல்லன். இவன் கொடுக்குமுன், இஃது அஃறிணைப்பொருள், இவர்கள் உயர்திணை மக்கள் என்று கூடச் சிந்திப்பதில்லை. இருதிணைப் பொருள்களையும் ஒக்கவே எண்ணி ஈந்துவந்தான். ஒருசமயம் பாரி தன் மலைவளங்காணத் தன் ஆழியில் ஊர்ந்து வெளியே சென்றவன், இயற்கை எழிலை இனிது துய்த்துக்கொண்டு வந்தான். காணவேண்டிய காட்சிகளைக் கண்டு களித்தான். பின்னர் அரண்மனை நோக்கி ஆழிமிசை இவர்ந்து வருவானானான். வருகின்ற வழியில் ஒரு முல்லைக்கொடி படர்ந்து தென்றலங் குழவி மெல்லெனத் தவழ்தலால், அலைப்புண்டு ஆடிக்கொண்டிருந்தது. அதனைக் கண்டான் பாரி. உடனே தன் வையத்தினின்று கீழே இழிந்தனன். "ஆ! இம்முல்லைக்கொடி, தான் நன்கு செழித்துப் படர் தற்குரிய கொழுகொம்பு இன்றி இப்படி அலைகிறது போலும்! இதற்கு ஆண்டவன் வாயினை அமைத்திருப்பின் தன் இடர்ப்பாட்டை எளிதில் வெளியிட்டிருக்கும். அஃது இன்மையால் இப்படி ஆடி அசைந்து தனக்கு உதவி வேண்டும் என்பதைக் காட்டுகின்றது போலும்!" என்று எண்ணினவன், அது படர்தற்குரிய கொழுகொம்பு ஒன்றைத் தன் அரண்மனை ஆட்க