பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ម្ដុំ சீருடைய கல்லொன்றை இட்டார், கேட்டே திருக்கண்கள் திறந்தாராம் குருகூர் நம்பி! தாருடைய மதுரகவி கேள்வி ஒன்றை நயமாகக் கேட்டவர்பால் ஞானம் பெற்றார்! 8. சேத்தத்தின் வயிற்றினிலே சிறிய வொன்று சேர்ந்து பிறந் தாவிந்த வையந் தன்னில் எத்தைத்தின் றெங்கதுவும் கிடக்கும்?’ என்ற இனியதொரு கேள்வியினை விடுத்தார்; மாறர் :அத்தைத்தின் றங்கேயே கிடக்கும்” என்றே அருளினரால்: மதுரகவி கேட்டி வர்தாம் வித்தகரென் நேஒர்ந்தார்: அவர்பொற் றாளில் வீழ்ந்தடிய ராயவர்க்குத் தொண்டு பூண்டார்! 9. நம்பெருமாள் என்றரங்கர் தம்மைச் சொல்வர்; நம்முடைய மாறனையும் கற்று வல்லோர் நம்மாழ்வார் என்கின்றார் உரிமை யோடே! நன்மகிழ மலர்மாலை சூட லாலே நம்பிவகு ளாபரணர் என்பர் மேலோர்: நாயகியாய்ப் பாசுரங்கள் நல்க லாலே அம்புவியோர் பராங்குசநாயகிஎன் கின்றார்; அருள்மாறன், சடகோபன் ஐயர் நாமம்! 10. வேதத்தில் ஒன்றான சாம வேத விரிவுக்குள் சாந்தோக்யந் தன்னில் கண்ட கோதற்ற உத்'என்னும் பகுதி தன்னைக் குலவின்பப் பாட்டாக்கி-மக்கள் உய்யத் தீதற்ற நெறிகாட்டித் திருமால் காட்டும் "திருவாய்நன் மொழி'யாக்கித் தந்தே, இன்றும் ஒது'திரு விருத்த மொடாசிரியம் மிக்கிங் குயர்ந்த"திரு வந்தாதி” நான்கும் தந்தார்.