பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சடகோபன் செந்தமிழ் பேசுகின்றாள். ஆண்டாள் பேசுகின்றபடியே இவளும் சங்கிற்கே இடையீடின்றியே பகவதநுடம் பெற்றிருக்கும் உடம்பு வெளுக்கும் நிலை ஏற்பட்டால், பகவதநுபவம் சிறிதுமில்லாத தன் நிலை என்னவாகுமோ என்று ஏங்குகின் றாள் போலும், பெருங் கேழலார்தம் பெருங்கண் மலர்ப் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார்’ (திருவிருத் 45. பிறழ -மிக) என்று எம்பெருமான் தன்னைக் குளிர நோக்கினமையைப் பேசுகின்றாள், கரியவாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே (அமலனாதி - 8) என்று பாண்பெருமாள் அநுபவித்தவாறு இவளும் அநுபவித்து அத்திருக்கண்களின் நீர்மையை நினைத்தவாறே இவளுடைய கண்கள் நீர் மல்க நிற்கும் நிலையை எடுத்து காட்டுகின்றாள். கின்று கின்று குமிறும் : நெஞ்சின் நினைவை வாய்விட்டுச் சொல்லமாட்டாத இன்னாப்பாலே உள்ளே குமுறா நின்றாள். குயிறும் என்று பதம் பிரிக்காமல் (நின்று நிறு உகும் இறும்) என்று பிரித்து 'உகும் நீர்ப்பண்டமாக நின்றாள்; இறும் - தளர்ந்து விழுகின்றாள்' என்று சிலர் பொருள் கூறினார்களாம். அது சுவையற்றது என்று மறுக்கப் பட்டதை ஈட்டாசிரியர் குறிப்பிடுகின்றார். ஈடு : ராஜ கோஷ்டியிலே உகும் இறும் என்று பொருள் சொல்ல, விக்கிரம சிங்கன் என்பான் ஒருவன் ‘அங்ங்ணல்ல; கன்றைக் கடக்க வைத்தால் முலைக் கண் கடுத்துப் பசு அல்மந்து படுமாப்போலே உள்ளோடுகின் ற கிலேசம் வாய்விட மாட்டாதே நோவுபடுகின்ற இவளுக்கு இது வார்த்தையோ? என்றான். பெருவெள்ளத்தில் சுழிக்குமாப் போலே அகவாயிலுள்ளது வெளிவிடமாட்டாதே உள்ளே நின்று 'கழிக்கிறபடி என்பது கண்டு மகிழ்க. -