பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் - £59 துரது போகுமாறு சொன்னவிடத்தும் போகாத மேகங். களைக் குறித்துத் தலைவி இணங்கிப் பேசும் பாசுரம் இது. பாசுரத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பொருளை மனத்தில் அமைத்துக் கொள்க. இப்படிப் பலவாறு கூறி அலற்றுவதற்குப் பயன்: முடியிருந்து வேவதோர் கொள் கலம் முடிதிறந்த விடத்து ஆவி எழுந்து முன்னின்ற வெப்பம் நீங்கினாற் போல, ஆற்றாமையால் உள்ளே. மிக்கு நின்ற தாபத்தை வாய்விட்டு வெளியிட அது சிறிதளவு குறைதலாகும். - இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான gசூக்தி: 'கீழ் நீலமுண்ட மின்னன்ன மேனிப்பெருமானுலகு என்று பரமபதத்தே தூது விட்டாள்; அது பரிபக்தி, பர ஞானம், பரமபக்தி உள்ளவர்க்கல்லது புகவொண்ணாத தேசமாகையாலே அவதாரங்களிலே தூது விடப்பார்த்தாள்: அதுவும் சம காலத்திலுள்ளார்க்கு ஆகி பின்னை இல்லை யாகையாலே பிற்பட்டார்க்கும். அநுபவிக்கலாம். thiq. சுலபமான திருமலையிலே திருவேங்கட முடையான் திருவடி களிலே மேதத்தைத் துTதாக விடுகின்றாள். திருமலை நோக்கிப் ப்ோகும் மேகங்களே! என்னுடையது.ாது வாக்கியங் களைக் கொண்டு போய்ச் சொல்லுங்கள் என்றால், சொல்லு கிறீர் இல்லை; திருமலைக்குப் போகிற பராக்கிலே போகாத போகிறவற்றைக் கொண்டு சொல்ல மாட்டீர்களாகில் உங்கள் திருவடிகளை என் தலைமேல் வையுங்கள் என்றால், வைக்க மாட்டீர்களா? திருமலைக்குப் போவாருடைய திருவடிகள் உத்தேச்யமாயிறேயிருப்பது. திருமலைக்குப் போகிறவர்களைத் தலையிலே வைக்கக் கிடைக்குமோ? திருவடியை (அதுமனை)ப் பிராட்டி இங்கே ஒரிராத் தங்கிப் போக வேண்டுமென்று அருளிச் செய்ய, ஒண்ணாது என்று அவனும் மறுத்துப் போனாப் போலே போகா நின்றன’’ என்பது.