பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்கள் பtrசுரங்கள் 275 கின்றது என்று சீறி மின்னிடை மடவார் நானல்லேன்: நின்னருள் சூடும் மின்னிடை மடவார் வேறேயுண்டு என் கின்றாள். 'முன்புகான் அதஞ்சுவன்! நீ இங்கே வந்து செய்கின்ற ஊடல்நீக்கும் சாகசங்கள் உன்னுடைய மின்னிடை மடவார் கட்குத் தெரிந்தால், அவர்கள் உன்னை மாத்திரம் தண்டி யாமல் என்னையும் சேர்த்துத் தண்டிப்பர்களே என்று அஞ்சு கின்றேன். இப்படியும் கருதலாம். இன்னும் பலவிதமாகவும் கருத்து உரைக்கலாம். 'மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே’: இங்கு 'மாயவனே! என்பது உயிரான விளி. உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துப் பெண்ணாக்கை யாப்புண்டு’ (திரு. விருத், 66) என்று பெண் பிறந்தார் சொல்லும்படி சீதாப் பிராட்டிக்காக நீ செய்த செயலும் - இப்படி ஒரு செயல் செய்து பெண்களுக்குக் காரியம் செய்பவன் போலப் புகழ் ஈட்டிப் பெண்களை வலையில் அகப்படுத்திக் கொண்டு துடிக்க விடுதற்காகச் செய்த செயலேயாதலால் அதுவும் மாயமேயாகும். இங்கு ஈட்டின் பூரீசூக்தி : “ஒரு துறையிலே ஒரு மெய் பரிமாறாவிடில் நமக்கு மேலுள்ளதெல்லாம் ஒரு தொகையில் அகப்படாது என்று செய்தாயத்தனையன்றோ? அபலைகளை அகப்படுத்திக் கொள்ள இட்டவழியன்றோ?' "உன்னுடைய சுண்டாயம் கான் அறிவேன்' ; சுண்டாய மாவது தன் காரியத்தில், நோக்குடைமை (ஸ்வார்த்த பரத் வம்) . நீசெய்கின்ற காரியமெல்லாம் உன்னுடைய செயல்கள் எல்லாம் பண்டே என்னால் அறியப்பட்டவைகாண். நீ செய் கின்றவையெல்லாம் மெய் என்று நினைப்பவள் சனக ராசன் திருமகள் காண். நான் அறிந்தாலென்ன? அறியா விடில் என்ன? இனி உனக்கும் எனக்கும். ஏதேனும் ஒரு